இந்த சாக்கடையில் பட்டம் வாங்கின டாக்டர் கிருஷ்ணசாமி அந்த பட்டத்தையும், எம்.எல்.ஏ. பென்ஷனையும் திருப்பி தரணும்: எகிறி அடிக்கும் ஏர்ப்போர்ட் மூர்த்தி

By Selvanayagam PFirst Published Oct 28, 2019, 9:15 AM IST
Highlights

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது ஆளுங்கட்சி, தி.மு.க. என எல்லோரையும் தெறிக்க விட்டது தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் கறுப்புக் கொடி போராட்டம். அதாவது ‘பள்ளர் சமுதாயத்தினர்’ என்று தாழ்த்தப்பட்டோரில் ஒருவராக பட்டியலினத்தில் வைக்கப்பட்டுள்ளோர் இவர்கள். 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது ஆளுங்கட்சி, தி.மு.க. என எல்லோரையும் தெறிக்க விட்டது தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் கறுப்புக் கொடி போராட்டம். அதாவது ‘பள்ளர் சமுதாயத்தினர்’ என்று தாழ்த்தப்பட்டோரில் ஒருவராக பட்டியலினத்தில் வைக்கப்பட்டுள்ளோர் இவர்கள். 

கறுப்புக் கொடி காட்டி, தேர்தலை இவர்கள் புறக்கணிக்க காரணம் ‘எங்களை பட்டியலினத்தில் இருந்து நீக்குங்கள்’ என்கிற கோரிக்கயை வலியுறுத்தித்தான். ’தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதால் எங்களுக்கு கிடைக்கும் சலுகைகள், இட ஒதுக்கீடுகள் முக்கியமில்லை. ஸ்டேட்டஸ்தான்  முக்கியம்!’ என்று, இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜான் பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்த நிலையில் இந்த கோரிக்கை பற்றி முடிவெடுக்க ஒருகுழு அமைத்து, கருத்து கேட்டிருக்கிறது தமிழக அரசு. இந்த குழு சார்பாக சம்பந்தப்பட்ட சமுதாய மக்களின் கருத்தை அறியும் கூட்டமானது சமீபத்தில் சென்னை எழிலகத்தில் நடைபெற்றது. இதில் புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் தன் கருத்தை பதிவிட்டு, கீழே இறங்கினார். அவரை அங்கிருந்த சிலர் முற்றுகையிட்டனர், செருப்பை அவர் மீது வீசினர், கூச்சல் போட்டு களேபரம் செய்தனர். 

இப்படி செருப்பு வீசப்படுமளவுக்கு மூர்த்தி என்ன பேசினார்? என்று அவரிடமே கேட்டபோது, பதிலளித்தவர்....”பள்ளர் சமுதாய மக்கள் எஸ்.சி. பட்டியலில் இருந்து வெளியேறுவதற்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். ஆனால் அதற்காக மற்றவர்களை தவறாக பேசக்கூடாதில்லையா!

டாக்டர் கிருஷ்ணசாமி தன்னுடைய பேச்சில் ‘சாக்கடையில் இருந்து வெளியேறுங்கள்.’ என்கிறார் எங்களை. இந்த சாக்கடையில்தானே அவரும் அவரது மகனும் டாக்டரானார்கள். ஓட்டப்பிடாரம் தொகுதியில் நின்று ஜெயித்து, எம்.எல்.ஏ.வானது இந்த சாக்கடையால்தானே. இன்றுவரை எம்.எல்.ஏ. பென்ஷனை இந்த சாக்கடையால்தானே பெற்றுக் கொண்டிருக்கிறார்!

டாக்டர் கிருஷ்ணசாமி தன்னுடைய பட்டத்தையும், தான் இதுநாள் வாங்கிய பென்ஷனையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அதை செய்யச் சொல்லி அவருக்கு எதிராக கடுமையாக போராடுவோம்.” என்கிறார் பொங்கலாக.....
என்னாங்க இது வம்பா போச்சு!

click me!