என்னை ரொம்பவே கஷ்டப்படுத்துறாங்க! தரக்குறைவா பேசுறாங்க!: ஸ்டாலின் மனைவி துர்காவின் துயரக் கண்ணீர்.

By Selvanayagam PFirst Published Oct 28, 2019, 8:29 AM IST
Highlights

எல்லா ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்! என்பார்கள். தமிழக முதல்வராகியே தீரவேண்டும்! எனும் வெறியுடன் உழைத்துக் கொண்டு, ஓடிக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அதில் வெற்றி பெற்றால் நிச்சயம் அதன் பின்னணியில் அவரது மனைவி துர்காவின் பெரும் பங்கு உண்டு. 

எல்லா ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்! என்பார்கள். தமிழக முதல்வராகியே தீரவேண்டும்! எனும் வெறியுடன் உழைத்துக் கொண்டு, ஓடிக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அதில் வெற்றி பெற்றால் நிச்சயம் அதன் பின்னணியில் அவரது மனைவி துர்காவின் பெரும் பங்கு உண்டு. 

கணவரின் அரசியல் எழுச்சி, வெற்றிக்காக வேண்டுதல், பிரார்த்தனை, யாகம், சடங்குகள், பரிகாரம் என்று அவர் ஏறி இறங்காத கோயில்களே இல்லை. மனுஷி அந்தளவுக்கு கணவருக்காக உருகி உருகிப் போராடுகிறார்


இந்த நிலையில், தன் மனதை ரொம்பவே கஷ்டப்படுத்துறாங்க, தன்னை தவிக்கவிடுறாங்க, ரொமப்வே தப்புத் தப்பா பேசுறாங்க! என்று  மனம் நொந்து சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார் துர்கா. பிரபலமான ஒரு வார இதழ் குழுமத்திலிருந்து வெளி வரும் பெண்கள் பத்திரிக்கையில் ஒரு தொடர் எழுதி வருகிறார் துர்கா. அதில்தான் இப்படி வருந்தியிருக்கிறார். 

யார் அப்படி துர்காவை கஷ்டப்படுத்தி, கண்ணீர் விட வைப்பது?

அவரே சொல்லட்டும்....”என் கணவர் ஸ்டாலின் மீது வந்து விழும் அபாண்டமான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறேன்? எப்படி ஜீரணிக்கிறேன்? என்று சில பெண்கள் என்னிடம் கேட்பதுண்டு. அப்போதெல்லாம் என் மனம் இளகிடுவேன். காரணம், என்னுடைய பெரும் வருத்தங்களை பற்றிய நியாயமான் கேள்வி அது.

எந்த ஒரு மனைவிக்கும் தன் கணவரை பற்றி யாராவது குறை சொன்னால், கோபமும் வருத்தமும் வரத்தானே செய்யும். நானும் இதற்கு விதிவிலக்கில்லையே. முன்னாடியெல்லாம் எம்.ஜி.ஆரோ, காமராஜரோ, மாமாவோ (கருணாநிதி), இவங்களோ (ஸ்டாலின்) ஒருத்தரை ஒருவர் அநாகரிகமா பேசமாட்டாங்க. ஆனால் இப்பல்லாம் அப்படி இல்லை. ரொம்ப தரம் தாழ்ந்த வார்த்தைகளில் பேசுறாங்க. எதிர்க்கட்சிகளை எதிரிகளா நினைக்கிறாங்க. அரசியல்ல உள்ளவங்கதான் அப்படின்னா, பத்திரிக்கைகளும் மீடியாக்களும் கூட ஏதோ நேர்ல பார்த்த மாதிரி கற்பனையா எழுதிடுறாங்க, பேசுறாங்க. 

சமீபத்தில் கூட ஒரு பத்திரிக்கை ‘தி.மு.க.வை மறைமுகமாக இயக்குறது துர்கா’தான்! அப்படின்னு அவங்களாகவே ஒரு கற்பனை செய்தியை போட்டுட்டாங்க. இதுக்காக அவங்க மேலே நான் கோர்ட்ல கேஸ் போட்டிருக்கேன். 

அரசியல் ரீதியில ஆரோக்கியமா என் கணவரை யாரும் விமர்சனம் பண்றப்ப பெருசா வருத்தமிருக்காது. ஆனால், அவரோட உடல் நிலை பற்றி கற்பனையாவும், வதந்தியாகவும் எதையாவது தவறான தகவல்களை எழுதுறாங்க, பரப்புறாங்க. இதைத்தான் சகிக்க முடியலை. 

அதிலேயும், பல வருஷமா எங்க கட்சியிலிருந்து அண்ணன் தங்கையா பழகினவங்க கூட வெளியில போயி வதந்தியா பேசுவாங்க. அப்பதான் ‘நம்ம கூட நல்லவிதமா பழகினவரே இப்படி வதந்தி கிளப்புறாரே?’ அப்படின்னு தோணும். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் எங்ககிட்டேயே வந்து சேருவாங்க. மறுபடியும் எங்களை பார்க்கிறப்ப நல்லவிதமா பேசுவாங்க. அப்ப எப்படி இருக்கும் தெரியுமா?...

அதுவும் இப்ப சோஷியல் மீடியாவுல யாரு வேணா, எதை வேணா, எப்படி வேணா எந்த கட்டுப்பாடும் இல்லாம எழுதலாமுன்னு ஆகிடுச்சு. தரம் தாழ்ந்து விமர்சிச்சு கண்ணீர் விட வைக்கிறாங்க. 

யாரையும் எங்களை குறை சொல்லாதீங்கன்னு நான் சொல்லலை. ஆரோக்கியமான விவாதம், விமர்சனம் வையுங்க. தவறுகளை ஆதாரத்தோடு சுட்டிக்காட்டுங்க. திருத்திக்குறோம். அதைவிட்டுட்டு ஆதாரமில்லாமல் கற்பனையா வதந்தியை பரப்பாதீங்க. மனசு ரணப்படுது. 

ஆனால் எங்க வீட்டுக்காரங்களுக்கோ இந்த வருத்தமெல்லாம் பழகிடுச்சு. புளிச்சுப்போச்சு. அதனால எங்கிட்ட ‘இது மாதிரி விஷயங்களை எல்லாம் வாசிக்காத. விட்டுத் தள்ளு’ அப்படிம்பாங்க. ஆனால் எனக்குதான் அந்த பொய்களை பார்த்து ஆதங்கம் வருது. ரணப்படுது மனசு. 

உண்மையற்ற, பச்சை பொய் தகவல்களை வேணும்னே பரப்புறப்ப கண்ணீரே வந்துடும்.” என்கிறார் உருக்கமாக. 

திருந்துங்கப்பா!

click me!