அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது. அண்ணாமலையிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
ராமரை போல கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் மோடி. இவரை போன்றவரை இளைய தலைமுறை பார்த்ததில்லை என பாஜக மாநிலத்துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அதிரடி அறிவிப்பு வெளியிட்டு தமிழக அரசியல் அரங்கை அதிர வைத்தனர். நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டாக அறிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக, திமுக கடுமையாக விமர்சிக்கவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளருக்கு ரகசிய உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பாஜகவும், அண்ணாமலை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: செல்லாக்காசாக இருக்கும் ஆர்.பி.உதயக்குமாருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.! அண்ணாமலை ஆவேசம்
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: அண்ணாவை, அம்மாவை பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும் தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் இருக்க முடியாது. அதிமுக இயக்கத்தின் மதிப்பு அவருக்கு தெரியவில்லை. கவுன்சிலராகக் கூட வெற்றி பெறாதவருக்கு அரசியல் அனுபவம் இல்லை. தேர்தலில் நின்று வென்றால்தான் பக்குவம் வரும். லேகியம் விற்பவர் மாதிரி அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார்.
அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது. அண்ணாமலையிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பா.ஜ.க தவிர எந்த கட்சி வந்தாலும் தாயுள்ளதோடு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம் என பேசியிருந்தார்.
இதையும் படிங்க: நாங்கள் வயதானவர்கள் என்றால் எடப்பாடி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் இளைமையானவர்களா.? சேலஞ்சர் துரை அதிரடிகேள்வி
இந்நிலையில், ஆர்.பி.உதயகுமாருக்கு கே.பி.ராமலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த: அண்ணாமலை லேகியம் விற்பவர் தான். ஊழல் நோயை விரட்டும் லேகியத்தை விற்கிறார். ஊழல்வாதிகளை அண்ணாமலை ஒழிப்பார். ராமரை போல கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் மோடி. இவரை போன்றவரை இளைய தலைமுறை பார்த்ததில்லை. கருத்து கணிப்புகளைவிட மக்கள் மனநிலையே தேர்தல் வெற்றிக்கு மிக முக்கியம் என கே.பி.ராமலிங்கம் கூறினார்.