"அரசியல் அபலை நாஞ்சில் சம்பத் ஜெயலலிதாவை விமர்சிக்கலாமா?" - கண்டபடி வறுத்தெடுத்த கே.பி.முனுசாமி…

 
Published : May 15, 2017, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
"அரசியல் அபலை நாஞ்சில் சம்பத் ஜெயலலிதாவை விமர்சிக்கலாமா?" - கண்டபடி வறுத்தெடுத்த கே.பி.முனுசாமி…

சுருக்கம்

kp munusamy pressmeet about nanjil sampath

அரசியல் அபலையாக இருந்து அதிமுகவிவுக்கு வந்தேறியாக வந்து சேர்ந்த நாஞ்விசில் சம்பத்துக்கு ஜெயலலிதாவை விமர்சனம் செய்வதற்கு என்ன அருகதை இருக்கிறது என முன்னாள் அமைச்சர்கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி சின்னாபின்னமாகி கிடந்த நாஞ்சில் சம்பத்தை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தாயுள்ளத்தோடு, அதிமுகவில் இணைத்து, அவருக்கு பதவி வழங்கியதாக தெரிவித்தார்.

அரசியலில் அபலையாக இருந்த நாஞ்சில் சம்பத்துக்கு,அரசியல் வாழ்வளித்த ஜெயலலிதாவை விமர்சனம் செய்ய அவருக்கு என்ன தகுதி இருக்கிறது உன கேள்வி எழுப்பினார்.

நாஞ்சில் சம்பத்தின் மகன் திருமணத்துக்காக லட்சக்கணக்கான ரூபாய் ஜெயலலிதா வழங்கினார் என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தளவாய் சுந்தரம் ஜெயலலிதாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாகவும், அவரை உடனடியாக, டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்த நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!