ஓட்டு கேட்டது குத்தமா..? 'எத்தனை முறை கைது செய்வீங்க..' பாஜக நிர்வாகியை கதற வைத்த போலீஸ் !!

Published : Feb 12, 2022, 01:22 PM IST
ஓட்டு கேட்டது குத்தமா..? 'எத்தனை முறை கைது செய்வீங்க..' பாஜக நிர்வாகியை கதற வைத்த போலீஸ் !!

சுருக்கம்

கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து கொண்டிருந்த சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் வார்டு வாரியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை போத்தனூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள சென்றார். அப்போது அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசார் அவரை அங்கிருந்து புறப்பட கூறினர். ஆனால்,  தான் பிரச்சாரம் மேற்கொள்ள வந்திருப்பதாகவும், இதை தடுக்க கூடாது என்றும் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் கடந்த இரண்டு முறை வேலூர் இப்ராஹிம் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி கோவை பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!