கொங்கு மண்டலம் இனி திமுகவின் கோட்டை.. ஆட்டம் ஆரம்பம்.. அதிமுகவை அலறவிட்ட மகேந்திரன்.

Published : Jul 09, 2021, 12:55 PM IST
கொங்கு மண்டலம் இனி திமுகவின் கோட்டை.. ஆட்டம் ஆரம்பம்.. அதிமுகவை அலறவிட்ட மகேந்திரன்.

சுருக்கம்

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படலாம் , ஆனால்  எதிர்காலத்தில் அப்படி இருக்காது எனவும் கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையயாக மாற்றுவது நிச்சயம் என திமுகவில் இணைந்த மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படலாம் , ஆனால்  எதிர்காலத்தில் அப்படி இருக்காது எனவும் கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையயாக மாற்றுவது நிச்சயம் என திமுகவில் இணைந்த மகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் நேற்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

இந்நிலையில் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  திமுக தலைவர் கொடுக்கும் பொறுப்பை ஏற்று  செயல்படுத்துவேன் என்றும் , திமுகவிற்கு இன்னும் பெருமளவு ஆதரவு அளிக்கும் வகையில் வேலை செய்வேன் என்றார். அரசு செயல்பாடுகள் மக்களிடம் சேர்கிறதா என்றும், ஆதரவு  திரட்டுவதும்தான் என்  வேலை என்றார்.

மக்கள் நீதி மையத்தில் இருந்தது போன்ற பொறுப்பு வேண்டாம் என்றும், பொறுப்பு முக்கியம் இல்லை, தலைவர் பெருந்தன்மையாக  பொறுப்பு கொடுதாலும் வேலை செய்வேன், இல்லாவிட்டாலும்  வேலை செய்வேன் என தெரிவித்தார். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக  பார்க்கப்படலாம் , ஆனால்  எதிர்காலத்தில் அப்படி இருக்காது; கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையயாக மாற்றுவது நிச்சயம், அதுவே என் நோக்கம் என்றும் கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

தோல்வி பயத்தால் தொகுதி மாறும் செந்தில் பாலாஜி..? கோவை தான் அடுத்த டார்கெட்.. பக்கா ஸ்கெட்ச் போட்ட திமுக
ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!