அவமானம்... பெண்களை பற்றி இழிவாக பேசும் ஐ.லியோனிக்கு பதவியா..? ராமதாஸ் சீற்றம்..!

By Thiraviaraj RMFirst Published Jul 9, 2021, 12:50 PM IST
Highlights

பெண்களை இழிவாகப் பேசுபவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் பதவி கொடுப்பதா..? என்று லியோனியின் நியமனம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களை இழிவாகப் பேசுபவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் பதவி கொடுப்பதா..? என்று லியோனியின் நியமனம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமனம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், சிறந்த ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவைப் பட்டிமன்ற நடுவர் ஆகிய காரணங்களால் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக லியோனியை நியமனம் செய்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். பெண்களை இழிவுபடுத்தி பேசும் ஒருவரை இப்பதவியில் அமர்த்துவதைவிட, அந்த பதவியை மோசமாக அவமதிக்க முடியாது.
 
பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியில் இருந்து லியோனியை நீக்கிவிட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

click me!