கொங்கு நாடு என்பது விஷமத்தனமான சிந்தனை... திமுகவுக்கு ஆதரவாக பா.ஜ.க.வுடன் மல்லுக்கட்டும் அதிமுக..!

By Thiraviaraj RM  |  First Published Jul 12, 2021, 12:30 PM IST

கொங்குநாடு என்பது விஷமத்தனமான சிந்தனை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 


கொங்குநாடு என்பது விஷமத்தனமான சிந்தனை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், ‘’கொங்குநாடு  என்ற பிரிவினை வந்தால் தமிழ்நாட்டின் அமைதி பாதிக்கும். கொங்குநாடு என்ற சிந்தனை நாட்டிற்கு நல்லதல்ல. யாரையோ சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக பாஜகவினர் கொங்குநாடு என்று கூறியிருக்கிறார்கள். கொங்குநாடு என்ற கருத்தை யார் முன்னிறுத்தி இருந்தாலும் அவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழர்கள் என்ற உணர்வுடன் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கொங்குநாடு என விஷச் சிந்தனையை விதைக்க வேண்டாம். தமிழ்நாட்டின் அமைதியை குலைக்க முயற்சிக்க கூடாது.

அறிவியல் உலகத்தில் இன்று உலகமே கைக்குள் வந்துவிட்டது. பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவை சிறப்பாக இருக்க நாடு பலமாக இருக்க வேண்டும். சிறு, சிறு மாநிலங்களாக இருக்கும் போது நாட்டின் பலம் குறையும். தனிநபர் கொடுக்கும் கருத்துக்கு நாம் முக்கியத்துவம் தர தேவையில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை, இது நம் நாடு... தமிழ்நாடு என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்'’என்று அவர் கூறியுள்ளார்.

click me!