
உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 6 மாத காலச் சிறைத் தண்டனையை ரத்து செய்யும்படி குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருப்பவர் நீதிபதி கர்ணன். தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேர் மீது சமீபத்தில் தெரிவித்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீதிபதி கர்ணன் தெரிவித்ததால் அவருக்கு மனநல பரிசோதனை நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேருக்கும் மனநல பரிசோதனை மேற்கொள்ளுமாறு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு 6 மாதச் சிறைத் தண்டனை விதிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கர்ணனை கைது செய்ய போலீசார் கொல்கத்தாவில் முகாமிட்டுள்ள நிலையில், தனக்கு விசிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை ரத்து செய்யும் படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி,. மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் ஆகியோருக்கு நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியுள்ளார்.