
கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புடைய நிறுவங்களின் இயக்குனர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
ப.சிதம்பரம் முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது தனியார் நிறுவனமான ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு முறைகேடாக அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது.
இதில் ப.சிதமபரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் அடிப்படையில், கார்த்தி சிதம்பரத்தின் மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துடன் தொடர்புடைய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரத்தை டெல்லி அழைத்து சென்று விசாரிக்க வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புடைய நிறுவங்களின் இயக்குனர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களிடம் விசாரணை நடைபெற்றது.
ரவி விஸ்வநாதன், பத்மா விஸ்வநாதன், உள்பட நிறுவனத்தின் 4 பேரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் பீட்டர், இந்திராணி தொடர்புடைய நிறுவனங்களிலும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.