கொடிது... கொடிது ஆன்லைன் வகுப்பு கொடிது... அலறித்துடிக்கும் ராமதாஸ்..!

By Thiraviaraj RMFirst Published Sep 3, 2020, 6:01 PM IST
Highlights

குழந்தைகளின் உயிரைப் பறிக்கும், மன அழுத்தத்தை உருவாக்கும் ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

குழந்தைகளின் உயிரைப் பறிக்கும், மன அழுத்தத்தை உருவாக்கும் ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் மட்டும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தி வருகின்றன. அதற்கான கல்வி கட்டணத்தையும், பாடப் புத்தகத்திற்கான கட்டணங்களையும் வசூலித்து விட்டன. ஆனால், ஆன்லைன் மூலமாக கல்வி கற்க சாதனங்கள் இல்லாத மாணவ- மாணவிகள் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், உளுந்தூர்பேட்டையில் ஆன்லைன் வகுப்புக்காக ஒரே மொபைலை பயன்படுத்துவதில் சகோதரிகளுடன் ஏற்பட்ட தகராறில் நித்யஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ், ‘’கொடிது... கொடிது ஆன்லைன் வகுப்பு கொடிது. தடை செய், தடை செய். குழந்தைகளின் உயிரைப் பறிக்கும், மன அழுத்தத்தை உருவாக்கும் ஆன்லைன் வகுப்புகளை தடை செய். பாழும் பணத்துக்காக பச்சிளம் குழந்தைகளை ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் கொடுமைப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடு’’என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

click me!