ஊரடங்கு நேரத்தில் டிராவல்ஸ் அதிபரின் மகளுடன் நடந்த ரிஜிஸ்டர் திருமணம்..!! உயிருக்கு பாதுகாப்பு கேட்கும் காதலன்

Published : Sep 03, 2020, 05:44 PM IST
ஊரடங்கு நேரத்தில் டிராவல்ஸ் அதிபரின் மகளுடன் நடந்த ரிஜிஸ்டர் திருமணம்..!! உயிருக்கு பாதுகாப்பு கேட்கும் காதலன்

சுருக்கம்

இது குறித்து தெரிவித்துள்ள அந்த இளைஞர்,  தனது ஆட்பலத்தையும், பண பலத்தையும் பயன்படுத்தி தங்களுக்கு எதிராக போலீசாரை ட்ராவல்ஸ் அதிபர் ஏவுகிறார் எனவும், புகார் கொடுத்த  தங்கள் மீதே பொய்யான புகாரை செலுத்த முயற்சி செய்வதாக அந்த இளைஞர் கூறியுள்ளார்.

பிரபல  ட்ராவல்ஸ் உரிமையாளரின் மகளும் கறிமுதீன் என்ற நபரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் இந்த காதல் விவகாரத்தில் அந்த ட்ராவல்ஸ் உரிமையாளருக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இதனால் அந்த டிராவல்ஸ் உரிமையாளரின் மகளும், அந்தபெண்ணை காதலித்த அந்த இளைஞரும் கடந்த மார்ச் மாதம் வீட்டிற்கு தெரியாமல் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் வெளியே வரமுடியாமல் இருவரும் அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டுள்ள காரணத்தினால் டிராவல்ஸ் அதிபரின் மகள் கறிமுதீன் வீட்டிற்கே வந்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் தந்தை சென்னை பெரம்பூரில் உள்ள கறிமுதீன் இல்லத்தில் தங்கியிருந்த மகளை மீண்டும் தனது வீட்டிற்கே அழைத்து வர முயற்சித்துள்ளார். ஆனால் அந்த பெண் அவருடன் வர மறுத்துள்ளார். மேலும் பெண்ணின் தந்தை தனது செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறையை அந்த இளைஞருக்கு எதிராக திசை திருப்புவதாக கூறப்படுகிறது. 

இது குறித்து தெரிவித்துள்ள அந்த இளைஞர்,  தனது ஆட்பலத்தையும், பண பலத்தையும் பயன்படுத்தி தங்களுக்கு எதிராக போலீசாரை ட்ராவல்ஸ் அதிபர் ஏவுகிறார் எனவும், புகார் கொடுத்த  தங்கள் மீதே பொய்யான புகாரை செலுத்த முயற்சி செய்வதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். மேலும், பெண்ணின் தந்தை 100க்கும் மேற்ப்பட்ட அடியாட்களை  வீட்டிற்கு அழைத்து வந்து  மிரட்டுவதாக கறிமுதீன் சென்னை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து பெண்ணின் தந்தை தங்கள் வீட்டிற்கு ஆட்களை அனுப்பி மிரட்டுவதால் தங்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்புள்ளது எனவே தங்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கறிமுதீன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!