கொடநாடு வீடியோ வழக்கு... சயன், மனோஜுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

Published : Jan 18, 2019, 01:26 PM ISTUpdated : Jan 18, 2019, 01:38 PM IST
கொடநாடு வீடியோ வழக்கு... சயன், மனோஜுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

சுருக்கம்

கொடநாடு விவகார வீடியோ வழக்கில் சயன், மனோஜ் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்க சென்னை நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. 

கொடநாடு விவகார வீடியோ வழக்கில் சயன், மனோஜ் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்க சென்னை நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. 

கொடநாடு விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், முதல்வர் பழனிசாமியை தொடர்புபடுத்தி, சயன் மற்றும் வாளையாறு மனோஜ் பேசினார். இது தொடர்பாக அதிமுக தொழில்நுட்ப அணியினர் அறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தமிழக சைபர் கிரைம் போலீசார், இரண்டு பேரையும் கடந்த 13ம் தேதி டெல்லியில் கைது செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இரவு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.

இரண்டு பேருக்கும் ஜாமின் வழங்கி விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று  எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இரண்டு பேரும் கோர்ட்டில் ஆஜராகி ஜாமின் கேட்டனர். அவர்கள் இருவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 பேர் வீதம் 4 பேர் ஜாமீன் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது. அச்சுறுத்தல் இருப்பதுபோல் உணருவதாக சயன் மற்றும் மனோஜ் தெரிவித்திருந்தனர். இதனால் அவர்களுக்கு பிணை பாதுகாப்பு வழங்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை 5.45 மணிக்குள் ஜாமின் நிபந்தனையை நிறைவேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.  

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!