நாங்க மட்டும் தக்காளி தொக்கா’... தமிழக மக்களின் வீட்டுக்கே வந்து இம்சிக்க காங்கிரஸ், பாஜக வியூகம்!

By Asianet TamilFirst Published Jan 18, 2019, 1:21 PM IST
Highlights

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தங்களுக்கென பிரத்யேக தொலைக்காட்சி சேனல் தொடங்கும் முயற்சியில் குதித்திருக்கின்றன.

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தங்களுக்கென பிரத்யேக தொலைக்காட்சி சேனல் தொடங்கும் முயற்சியில் குதித்திருக்கின்றன.

தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் சேனல் தொடங்குவதற்கான முஸ்தீபுகளைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. தங்களுக்கென தனி சேனல் இருந்தால், கட்சி சார்ந்த, கொள்கை சார்ந்த விஷயங்களை மக்களிடம் எளிதாகக் கொண்டு செல்ல முடியும் என்று இக்கட்சிகள் நினைக்கின்றன. இதன் வெளிப்பாடாக மத்தியில் ஆளும் பாஜகவுக்கென ஒரு சேனலை தொடங்குவதற்கான யோசனை டெல்லியில் தீவிரமாகியுள்ளது.

 

இதேபோல தேசிய கட்சியான காங்கிரஸும் செய்தி சேனலை தொடங்க ஆர்வம் காட்டிவருகிறது. டெல்லியில் உள்ள பல சேனல்கள் பாஜகவை மறைமுகமாக ஆதரிப்பதால், தங்களுக்கென தனி செய்தி சேனல் இருக்க வேண்டும் என்று அக்கட்சியும் யோசித்து வருகிறது. இதற்காக என்.டி.டி.வியில் பணியாற்றிய பர்கா தத்தை மையமாகக் கொண்டு சேனல் தொடங்கும் வேலைகள் ஓசையில்லாமல் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே அரசியலில் இறங்க முடிவு செய்துவிட்ட நடிகர் ரஜினியும், தனது மன்றம் சார்பில் சேனல் ஒன்றை தொடங்குவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். ரஜினியின் கல்வி நண்பர் நடத்திவரும் ஏழு வண்ண சேனலை ரஜினி தொடங்க உத்தேசித்துள்ள சேனலுக்கு மாற்றிவிட முயற்சிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, அமமுக போன்ற கட்சிகளுக்கென தனியாக சேனல்கள் உள்ளன. இந்த வரிசையில் ரஜினிக்கும் தனியாக சேனல் வர உள்ளது. 

click me!