கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 18 மணி நேரம் நடைபெற்ற விசாரணை… கலக்கத்தில் எடப்பாடி பழனிசாமி..!

Published : Sep 23, 2021, 08:34 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 18 மணி நேரம் நடைபெற்ற விசாரணை… கலக்கத்தில் எடப்பாடி பழனிசாமி..!

சுருக்கம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சந்தோஷ்சாமி மற்றும் மனோஜ் சாமி ஆகியோரிடம் தனிப்படை போலிஸார் 18 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சந்தோஷ்சாமி மற்றும் மனோஜ் சாமி ஆகியோரிடம் தனிப்படை போலிஸார் 18 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கோடாநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதிமன்ற உத்தரவைப்பெற்று மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா, மற்றும் நேபாளம் வரை சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி ஆகியோரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்றைய தினம் பத்து மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இரண்டாவது நாளாக ஆஜாராகிய இருவரிடமும் தனிப்படை போலீஸார் சுமார் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களுடன் 5 மற்றும் ஆறாவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த சதீசன் மற்றும் பிஜின் குட்டி ஆகியோரிடமும் எட்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.

கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கத் தூண்டியவர்கள் யார், அங்கிருந்து என்னென்ன பொருட்கள், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அவற்றை யாரிடம் கொடுத்துள்ளனர் என தனிப்படை போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளனர். 19 மணி நேரம் நடைபெற்ற விசாரணை வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்கவே மேல் விசாரணை நடத்தப்படுவதாக அதிமுக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில் மேற்கு மண்டல ஐ.ஜி. உதகையிலேயே முகாமிட்டு இரவு, பகலாக விசாரணை நடத்தி வருவது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!