காங்கிரஸ் எம்.எல்.ஏ., தொகுதியில் பரபரப்பு... சொந்தக் கட்சியினரே சூடு கிளப்பும் விவகாரம்..!

Published : Sep 23, 2021, 06:30 PM IST
காங்கிரஸ் எம்.எல்.ஏ., தொகுதியில் பரபரப்பு... சொந்தக் கட்சியினரே சூடு கிளப்பும் விவகாரம்..!

சுருக்கம்

தங்களது தொகுதி எம்.எல்.ஏ.,வை காணவில்லை என நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் சுவர் விளம்பரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தங்களது தொகுதி எம்.எல்.ஏ.,வை காணவில்லை என நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் சுவர் விளம்பரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் நாங்குநேரியில் போட்டியிட்டாலும் தொழில்களும், குடும்பமும் சென்னையில் இருந்து வருகின்றன. இதனை காரணம் காட்டி தேர்தலில் போட்டியிட ரூபி மனோகரனுக்கு வாய்ப்புத் தரக்கூடாது என உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

தற்போது, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ரூபி மனோகரன் தொகுதிப் பக்கம் வரவும் இல்லை, மக்களிடம் கோரிக்கைகளை கேட்கவும் இல்லை என அந்த காங்கிரஸ் பிரமுகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் நாங்குநேரி பேருந்து நிலைய சுற்றுச்சுவரில் ‘எம்.எல்.ஏ.வை’என சுவர் விளம்பரம் செய்துள்ளனர். ’வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு அரிச்சந்திரன், சொன்ன சொல்லை தவறமாட்டாரு ரூபி மனோகரன்’காணாமல் போன இவரை கண்டுபிடித்து தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் இப்படிக்கு ஐயப்பன் என எழுதப்பட்டுள்ளது. சொந்தக் கட்சியினரே தங்கள் கட்சி எம்.எல்.ஏவை காணவில்லை என விளம்பரம் செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!