உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஒரு லட்சம் பேர் விருப்பமனு… 9 மாவட்டங்களில் மட்டும் இத்தனை பேர் மனுத்தாக்கலா?

By manimegalai a  |  First Published Sep 23, 2021, 6:30 PM IST

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சுமார் 97 ஆயிரத்து 831 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சுமார் 97 ஆயிரத்து 831 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் மறுவரை செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இருகட்டங்களாக நடைபெறுகிறது. இதேபோல் பிறமாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தற்செயல் தேர்தல் நட்த்தப்படுகிறது. ஒன்பது மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது.

Latest Videos

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் போட்டியிட 97,831 பேர்  வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72,071 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15,967 பேரும்,  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,676 பேரும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,122 பேரும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல், மற்ற 28 மாவட்டங்களில் நடைபெறும் தற்செயல் தேர்தலில் போட்டியிட 2,547 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப்பெற வரும் 25-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

click me!