கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இவ்வளவு தொகையா..? அக்டோபர் 4ம் தேதி வருகிறது உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Sep 23, 2021, 5:54 PM IST
Highlights

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50000 வழங்கப்படுமா? என பரிசீலித்து வருவதாக உச்சநீதிமன்ற நிதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50000 வழங்கப்படுமா? என பரிசீலித்து வருவதாக உச்சநீதிமன்ற நிதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

கொரோனாவால் இறந்தவர்களுக்கு இதுவரை யாருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை. அரசும் அது பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொரோனாவால் இறந்தவர்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. 

காப்பீடு வழங்குவது தொடர்பான காப்பீட்டு நிறுவனங்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதால், அது தொடர்பான முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் மத்திய அரசின் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 50000 ரூபாய் வழங்கும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பரிசீலித்து அக்டோபர் 4ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். கொரோனா இழப்பீடு விஷயத்தில் இந்தியா செய்ததை, வேறு எந்த நாடும் செய்ய முடியாது என்ற கருத்தையும் நீதிபதிகள் கூறினர்.

click me!