எந்த தவறும் செய்யவில்லை என்றால் எதற்கு எடப்பாடியார் பதறுகிறார்.. மீண்டும் சீனா சீனுக்கு வரும் டிடிவி..!

By vinoth kumarFirst Published Sep 2, 2021, 8:33 AM IST
Highlights

ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்புது தேவையற்றது. அதை தொடர்வது தான் பெருந்தன்மையான அரசாக இருக்கும். இதை திமுகவிடம் எதிர்பார்க்க முடியாது. சசிகலா தொண்டர்களை சந்திப்பார். அவர் வரும் போது, அவருடைய திட்டம் குறித்து அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

பெருந்தன்மையான அரசு என்பதற்கான அடையாளத்தை திமுகவிடம் நாம் எதிர்பார்க்க முடியாது என்று டிடிவி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

திருச்சி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் எம்.ராஜசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க  டிடிவி தினகரன் வருகை தந்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு. இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு. இதுதான் என் நிலை" என்றும், அதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு, ரகசியம் - பரம ரகசியம்" என்றும் பதிலளித்தது குறித்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தினகரன், அவர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை. என்ன அர்த்தத்தில் கூறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.  திருந்தி வந்தால் பரதனாக ஏற்றுக் கொள்வோம் என்று முன்பு கூறினேன். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. 

கொடநாடு கொலை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டிய அவசியமில்லை. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்று தெரிவித்தார். ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்புது தேவையற்றது. அதை தொடர்வது தான் பெருந்தன்மையான அரசாக இருக்கும். இதை திமுகவிடம் எதிர்பார்க்க முடியாது. சசிகலா தொண்டர்களை சந்திப்பாரா என்ற கேள்விக்கு , அவருடைய திட்டம் குறித்து அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று விரக்தியுடன் பதிலளித்தார். இதனால், டிடிவி.தினகரன் சசிகலா இருவருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்வதையே இது காட்டுகிறது. 

click me!