கொடநாடு வழக்கில் யாரை வேண்டுமானாலும் விசாரிப்போம்.. அனைத்து உண்மைகளும் வெளிவரும்.. அலறவிடும் அரசு தரப்பு.!

By vinoth kumarFirst Published Sep 2, 2021, 1:22 PM IST
Highlights

இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில்;- கொடநாடு வழக்கில் பல வி‌ஷயங்களை முழுமையாக புலன் விசாரணை செய்ய வேண்டி உள்ளது. இந்த விவகாரத்தில் சதி நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரிக்க வேண்டி உள்ளது. இதுவரை நடந்த விசாரணையில் கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் விசாரிப்போம்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு  உதகை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு நீலகிரியில் உள்ள ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என போலீசாரும், இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை அளிக்க உள்ளதாக சயானும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து, சாயனிடம் கடந்த 17ம் தேதி 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வீடியோவில் பதிவு செய்தனர். இந்த விசாரணைக்குப் பின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம், கடந்த 23ம் தேதி ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 

இது தொடர்பான  அறிக்கை கடந்த 27-ம் தேதி இந்த வழக்கு   உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சயான் மற்றும் தனபால் அளித்த வாக்குமூலங்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூடுதல் விசாரணை நடத்த வேண்டியதால் அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் புலன் விசாரணை மேற்கொள்ள உள்ளதால், கால அவகாசம் அளிக்க வேண்டும் என அரசு தரப்பில் கேட்க்கொள்ளப்பட்டது. இதனையடுத்து வழக்கில் இன்று முதல் புலன் விசாரணை நடத்தி கொள்ள அனுமதித்த நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர்1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானுக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதை தொடர்ந்து சீருடை அணியாத 2 காவலர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில்;- கொடநாடு வழக்கில் பல வி‌ஷயங்களை முழுமையாக புலன் விசாரணை செய்ய வேண்டி உள்ளது. இந்த விவகாரத்தில் சதி நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரிக்க வேண்டி உள்ளது. இதுவரை நடந்த விசாரணையில் கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் விசாரிப்போம். வழக்கு சம்பந்தமான அனைத்து உண்மைகளும் வெளிவர வேண்டும். கொடநாடு, கொலை, கொள்ளை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

click me!