முடிஞ்சா தடுத்து பாருங்க.. விநாயகர் ஊர்வலம் நடந்தே தீரும்.. அரசை வம்பிழுக்கும் இந்து முன்னணி...

Published : Sep 02, 2021, 01:05 PM IST
முடிஞ்சா தடுத்து பாருங்க.. விநாயகர் ஊர்வலம் நடந்தே தீரும்.. அரசை வம்பிழுக்கும் இந்து முன்னணி...

சுருக்கம்

இதில் சென்னையை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர்கள், இந்துக்களின் வழிபாட்டு முறையை ஒடுக்கும் போக்கை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார். 

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எத்தனை தடைகள் போட்டாளும் திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் என இந்து முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம், ஆனால்  ஒட்டுமொத்தமாக விநாயகர் சதுர்த்தி விழா நடத்தக் கூடாது என்பதை ஏற்க முடியாது என ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ள நிலையில் தற்போது இந்து முன்னணியும் இதே கருத்தை  வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. விரைவில் 3வது அலை ஏற்படும் என்பதால் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், எதிர்வரும் காலம் பண்டிகை காலம் என்பதால் மக்கள் பண்டிகைகளின் மூலம் கூட்டம் கூடுவதை கூட தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை எச்சரித்துள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைக்கவோ, பின்னர் அதை கூட்டமாக சென்று கடலில் கரைப்பது போன்ற நடவடிக்கைகள் கூடாது என அரசு தடை விதித்துள்ளது. 

அதேபோல் வீட்டிலேயே சிலை வைத்து தனிமனிதராக வழிபாடு செய்து பின்னர் தனி நபராக அந்த சிலையை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த தடையை எதிர்த்து சுமார் 300க்கும் மேற்பட்ட கோவில்களில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை  மாம்பழம் பேருந்து நிலையம் அருகில் சிவா விஷ்ணு கோவிலில் இந்து முன்னணி சார்பில் இன்று வழிபாடு நடத்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் சென்னையை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர்கள், இந்துக்களின் வழிபாட்டு முறையை ஒடுக்கும் போக்கை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார். இந்துக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்திக்கு இல்லங்களில் சிலைகளை வைத்து பின்னர் அதை ஊர்வலமாக சென்று கரைத்து வழிபாடு மேற்கொள்வது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனாவை காரணம் காட்டி தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்து வருகிறது.

ஆனால் இந்து முன்னணி சார்பில் இந்த முறை  திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி நிச்சயம் நடைபெறும் என அவர்கள் அறிவித்தனர். அரசின் தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்து முன்னணி இவ்வாறு அறிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!