தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகளுக்கு பதில் 48 உள்ளன... அமைச்சர் எ.வ.வேலு தகவல்..!

Published : Sep 02, 2021, 12:39 PM IST
தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகளுக்கு பதில் 48 உள்ளன... அமைச்சர் எ.வ.வேலு தகவல்..!

சுருக்கம்

தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “தமிழகத்தில் மொத்தம் 48 சுங்கச் சாவடிகள் உள்ளது. இவை பெரும்பாலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றில் நகர்ப்புற பகுதிகளில் 14 சுங்கச் சாவடிகளும், புறநகர் பகுதிகளில் 9 சுங்கச் சாவடிகளும் உள்ளது. சென்னை நகர்புற பகுதிக்குள் உள்ள சென்ன சமுத்திரம், நெமிலி, வானகரம், பரனூர் மற்றும் சூரப்பட்டு ஆகிய 5 சுங்கச் சாவடிகளை கடக்க நீண்ட நேரம் ஆகிறது. அதை அகற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கும் முதலமைச்சர் ஏத்கனவே கடிதம் எழுதியுள்ளார். கூட்டத்தொடர் முடிந்தவுடன் ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
 
PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!