திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற 8 எம்.எல்.ஏ.,க்கள் டம்மியாக்க வழக்கு... நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Sep 2, 2021, 1:21 PM IST
Highlights

சட்டப்பேரவையில் சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களை எங்கு எப்படி அமர வைக்க வேண்டும் என்பது குறித்து சபாநாயகருக்கு மட்டும்தான் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது.

திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.,க்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக் கூடாது. எதிர்கட்சி வரிசையில் அமர வைக்கக்கூடாது என கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதி, சட்டப்பேரவையில் சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களை எங்கு எப்படி அமர வைக்க வேண்டும் என்பது குறித்து சபாநாயகருக்கு மட்டும்தான் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது. அதில் நீதிமன்றம் தலையிட்டு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. சபாநாயகர் கடைபிடிக்கும் நடைமுறைகள் சரியானதாக தான் இருக்கும்’’ என்று தெரிவித்து, லோகநாதன் அளித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

click me!