கோவிலில் முத்தமிடும் காட்சிகள்.. பாஜக பிரமுகர் போலீசில் புகார்.!

By T BalamurukanFirst Published Nov 23, 2020, 8:58 AM IST
Highlights

அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படும் படங்கள், தொடர்கள், வெப் சீரிஸ்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு அளிப்பதாக அறிவித்த நிலையில், கடந்த மாதம் நெட்ஃப்ளிக்சில் வெளியான ‘ஏ சூட்டபுள் பாய்’ என்ற தொடரில் கோவிலில் முத்தமிடுவது போன்ற காட்சிகளை வைத்ததற்காக நெட்ஃப்ளிக்ஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து புகார் அளித்த பா.ஜ.க இளைஞரணித் தலைவர் கவுரவ் திவாரி கூறியுள்ள செய்தியில்..., "இந்த தொடரில் முஸ்லிம் ஆண் ஒருவர் இந்துப் பெண் ஒருவரை காதலிப்பது போல் காட்டப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒரு கோவிலில் பின்னணியில் கற்பூரம் காட்டிக் கொண்டு இருக்கும் போது முத்தமிடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை ஏன் ஒரு மசூதியில் செய்திருக்கக் கூடாது?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தான் முத்தமிடும் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அது ஒரு கோவிலில் படமாக்கப்பட்டதற்குத் தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் திவாரி குறிப்பிட்டுள்ளார். "ஒரு மசூதியில் பாங்கு ஓதிக் கொண்டிருக்கும் போது இப்படி ஒரு காட்சியை படமாக்குவீர்களா? அப்படி செய்ய உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா? இந்துக்களின் பொறுமையை பலவீனமாக எண்ணி விடாதீர்கள். இது மத்தியப் பிரதேசத்துக்கு மட்டுமல்ல, சில பெருமானின் பக்தர்களையும் இழிவுபடுத்தும் செயல். இதற்காக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்." என்று கூறியுள்ளார். 
 
இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கும் மகேஸ்வர் கட் பகுதி சில பக்தர்களுக்காக ராணி அஹில்யபாய் ஹோல்கரால் ஏற்படுத்தப்பட்டது என்றும், இந்துக்களின் அடையாளமான அந்த பகுதியில் இது போன்ற காட்சிகளைப் படமாக்குவதும் இதன் மூலம் 'லவ் ஜிகாத்தை' ஊக்குவிப்பதும் இந்துக்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் விதமாக இருப்பதாக கவுரவ் திவாரி கூறியுள்ளார். இதனால் தனது செல்போனில் இருந்து நெட்ஃப்ளிக்ஸை நீக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

click me!