அப்பா நாத்தீகவாதியாம்.! மகன் ஆன்மீகவாதியாம். திமுக கொள்கையை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்..!

By T BalamurukanFirst Published Nov 23, 2020, 7:43 AM IST
Highlights

தருமபுரம் ஆதீனமடத்தில் கலைஞர் மு.கருணாநிதி தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து ஆசிபெற்ற புகைப்படத்தை நினைவு பரிசாக உதயநிதி ஸ்டாலினுக்கு 27-வது குருமகாசன்னிதானம்வழங்கினார்.
 

தருமபுரம் ஆதீனமடத்தில் கலைஞர் மு.கருணாநிதி தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து ஆசிபெற்ற புகைப்படத்தை நினைவு பரிசாக உதயநிதி ஸ்டாலினுக்கு 27-வது குருமகாசன்னிதானம்வழங்கினார்.

விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தின் ஒருபகுதியாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது 27-வது குருமகா சந்நிதானம் உதயநிதி ஸ்டாலினுக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். தொடர்ந்து, தமிழ்க்கடவுள் சேயோன் (முருகன் பாமாலை) என்ற மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தொகுத்தளித்த நூலினை தருமபுரம் ஆதீனம் வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

1972-ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீன கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டின்போது தருமபுரம் ஆதீனமடத்தில் கலைஞர் மு.கருணாநிதி தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து ஆசிபெற்ற புகைப்படத்தை நினைவு பரிசாக உதயநிதி ஸ்டாலினுக்கு 27-வது குருமகாசன்னிதானம்வழங்கினார். இதை தொடர்ந்து, 26-வது குருமகா சந்நிதானம் முக்தியடைந்து ஓராண்டு நிறைவடைவதைத் தொடர்ந்து வெளியிடப்பட உள்ள குருபூஜை மலருக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியை உதயநிதி ஸ்டாலின் குருமகா சந்திதானத்திடம் வழங்கி ஆசி பெற்றார்.

தேவர் குருபூஜைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு அவருக்கு வழங்கப்பட்ட திருநீற்றை நெற்றியில் இருந்து அழித்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை.ஆனால் ஸ்டாலின் மகனான உதயநிதி தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்று திருநீறு பூசியிருக்கிறார்.இது கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


 

click me!