போட்டின்னா இப்படி இருக்கனுப்பா !!  எம்எல்ஏக்கள் நடத்திய தம்பதிகளுக்கிடையேயான முத்தமிடும் போட்டி !!!

First Published Dec 12, 2017, 7:56 AM IST
Highlights
kissing contest in Jarkhant


போட்டின்னா இப்படி இருக்கனுப்பா !!  எம்எல்ஏக்கள் நடத்திய தம்பதிகளுக்கிடையேயான முத்தமிடும் போட்டி !!!

ஜார்க்கண்டில்  பழங்குடியின விழாவில் தம்பதிகள் முத்தமிடும் போட்டியை அம்மாநில எம்.எல்.ஏ.க்கள் இருவர் சேர்ந்து நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டம், லிட்டிபாரா என்ற பகுதியில் பழங்குடியினர் ஆண்டு தோறும் கொண்டாடும் திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ.க்களான சைமன் மராண்டி, ஸ்டீபன் மராண்டி ஆகியோர்  பங்கேற்றனர். இந்த விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 



இதில் பழங்குடியின தம்பதிகளுக்கிடையே முத்தமிடும் போட்டி நடந்தது. இதில் தம்பதியினர் ஓடி வந்து முத்தமிட்டுக்கொள்வதும்,  அதை பொதுமக்கள் பார்த்து ரசிப்பதும் போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. அதுவும் 2 எம்எல்ஏக்கள் முன்னிலையில் இப்போட்டி நடைபெற்றதால் சர்ச்சை எழுந்துள்ளதது.

வழக்கம்போல் இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ள கலாச்சார காவலர்களான பாஜகவினர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்த எம்.எல்.ஏக்கள் சைமன் மராண்டி, ஸ்டீபன் மராண்டி ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள சைமன் மராண்டி , பழங்குடியின மக்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாகவும், அதை தடுக்கும் நோக்கத்தில் இந்த முத்த போட்டிக்கு ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தார்.

 

click me!