
\2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தீர்ப்பு வரும் 21 ஆம் தேதி வழங்கப்படவுள்ள நிலையில் அவ்வழக்கில் இருந்து கனிமொழி எம்.பி. விடுதலை செய்யப்பட்டால் அவருக்கு திமுகவின் பொருளாளர் அல்லது துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் அரதசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் கருணாநிதியின் மகளும், எம்.பி.யுமான கனிமொழி மீதும் இது தெமாடர்பான குற்றச்சாட்டு எழுந்ததது.
இது தொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் வரும் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார்.
ஆனால் இந்த வழக்கில் இருந்து, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, விடுதலையாகி விடுவார் என்ற நம்பிக்கையில், அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவர்கள் எதிர்பார்ப்பது போல, தீர்ப்பு அமைந்து, கனிமொழி விடுதலையாகி விட்டால், அவருக்கு, கட்சியின் பொருளாளர் அல்லது துணைப் பொதுச் செயலர் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று, கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தத்தொடங்கியுள்ளனர். இது குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகனிடமும் பேசியிருக்கிறார்கள். .
2ஜி வழக்கில் கனிமொழி சிக்க வைக்கப்பட்டார். கட்சிக்காகவும், கருணாநிதியின் குடும்ப கவுரவத்துக்காகவும் அவர், இது நாள் வரை, 2ஜி வழக்குத் தொடர்பாக எந்த விஷயத்தையும் வெளியே சொல்லவில்லை. அவர் இந்த வழக்குத் தொடர்பாக ஆறு மாதம் டில்லி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்காக அவருக்கு, கட்சியில் மிக முக்கியப் பொறுப்பை அளிக்க வேண்டும் என, அன்பழகனும் ஸ்டாலினிடம் இது குறித்து பேசியிருக்கிறார்.
:ஆனால் கனிமொழிக்கு பதவி என்ற பேச்சு எழுந்ததும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோபம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன், அன்பழகனை சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரித்ததோடு, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பேசி விட்டு, கனிமொழிக்கு, பதவி வழங்கும் திட்டம் குறித்தும் பேசியிருக்கிறார்.
அப்படியே கனிமொழிக்கு பதவி வழங்குவதாக இருந்தால் கூட, 2ஜி வழக்கில் தீர்ப்பு வந்த பின், சில காலம் கழித்து கொடுக்கலாம் எனள ஸ்டாலின் அன்பழகனிடம் சொல்லியிருக்கிறார்.
ஆனால் அன்பழகன் அதை ஏற்காமல் உடனடியாக பதவி வழங்க வேண்டம் என வலியுறுத்தியிருக்கிறார். இதனால் ஸ்டாலின் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.