கிஷோர் கே.சாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்... திமுகவை எதிர்ப்போருக்கு எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Jun 25, 2021, 1:36 PM IST
Highlights

சமூக வலைதளங்களில் தலைவர்கள், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பிய கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
 

சமூக வலைதளங்களில் தலைவர்கள், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பிய கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

திமுக எதிர்ப்பாளராக தன்னை சமூக வலைதளப்பக்கங்களில் முன்னிறுத்திக் கொண்டவர் கிஷோர்.கே.சுவாமி. தன்னை பாஜக ஆதரவாளராகவோ, அதிமுக அனுதாபியாகவோ காட்டிக் கொள்ளாமல், திமுக குறித்தும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும் முதல்வர் மு.க ஸ்டாலின் பற்றியும் கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தவர். திமுகவை ஆதரிப்பவர்களையும் இழிவாக பதிவிட்டு வந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு உண்டு. திமுகவை அவதூறு பரப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சங்கர் நகர் போலீசார் கிஷோர் கே.சாமியை கைது செய்து சிறையிலடைத்தனர்.இதனைத் தொடர்ந்து, பெண் பத்திரிக்கையாளர் பற்றி ஆபாசக் கருத்துக்களை அவர் பதிவிட்டதாக புகார் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிஷோர் கே.சாமியை இரண்டாவது முறையாக கைது செய்தனர். பின்னர், நடிகை ரோகிணி உட்பட 3 பேர் தொலைக்காட்சி நபர் ஒருவருக்கு கிஷோர் மிரட்டல் விடுத்ததாக புகாரளித்தனர். அந்தப் புகாரின் பேரில் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்ட கிஷோர் கே.சாமி செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தலைவர்கள், பத்திரிகை நிருபர்கள் பற்றி அவதூறாக பேசிய கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது. இதனால் திமுகவை விமர்சித்து பதிவிடுபவர்களும் அச்சத்தில் உள்ளனர்.

click me!