இந்த அடிப்படை கூட ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸுக்கு தெரியாதா..? சசிகலாவின் அடேங்கப்பா மூவ்..!

Published : Jun 25, 2021, 01:23 PM IST
இந்த அடிப்படை கூட ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸுக்கு தெரியாதா..? சசிகலாவின் அடேங்கப்பா மூவ்..!

சுருக்கம்

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்த சசிகலா, சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்றி விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். 

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்த சசிகலா, சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்றி விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இதற்காக அவர் பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அதிமுக நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடி விட்டு, அதன் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சசிகலா இந்த செயலில் ஈடுபட்டு வரும் நிலையில், அவருடன் தொடர்பில் உள்ள மற்றும் உரையாடிய நிர்வாகிகளை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அண்மையில் சசிகலாவுடன் பேசிய ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 6 நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், ’கழகத்தின்‌ கொள்கை-ருறிக்கோள்களுக்கும்‌ கோட்பாடுகளுக்கும்‌ முரணான வகையில் செயல்பட்டதாலும்‌, கழகத்தின்‌ கண்ணியத்திற்கு மாகு ஏற்படும்‌ வகையில்‌ நடந்து கொண்டதாலும்‌, கழகக்‌ கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும்‌ அவப்‌ பெயரும்‌ உண்டாகும்‌ விதத்தில்‌ செயல்பட்ட காரணத்தினாலும்‌, ஈரோடு புறநகர்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த, சிந்து ரவிச்சந்திரன்‌, (கழக வர்த்தக அணிச்‌ செயலாளர்‌ ),  கந்த சந்தசாமி, (ஈரோடு புறதகர்‌ மாவட்ட எம்‌.ஜி.ஆர்‌. மன்ற இணைச்‌ செயலாளர்‌)  ரமேஷ்‌, (ஈரோடு புறதகர்‌ மாவட்ட எம்‌.ஜி.ஆர்‌. இளைஞர்‌ அணிச்‌ செயலாளர்‌) டாக்டர்‌ வரதராஜ்‌, (சத்தியமங்கலம்‌ தெற்கு ஒன்றியக்‌ கழகச்‌ செயலாளர்‌) காளியப்பன்‌, (கோபிசெட்டிபாளையம்‌ நகரக்‌ கழகச்‌ செயலாளர்‌)

ஆகியோர்‌ இன்று முதல்‌ கழகத்தின்‌ அடிப்படை உறுப்பினர்‌ பொறுப்பு உட்பட அனைத்துப்‌ பொறுப்புகளில்‌ இருந்தும்‌ நீக்கி வைக்கப்படுகிறார்கள்‌. கழக உடன்பிறப்புகள்‌ யாரும்‌ இவர்களுடன்‌ எவ்விதத்‌ தொடர்பும்‌ வைத்துக்கொள்ளக்‌ கூடாது என கேட்டுக்கொள்கிறோம்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா தான் அதிமுக உறுப்பினர்களை அழைத்து பேசுகிறாரே தவிர, சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தாங்களாக சசிகலாவை அழைத்து பேசவில்லை. அதேபோல் அதிமுக உறுப்பினர்களை அழைத்து பேசும் ஆடியோக்களை சசிகலா தரப்பு தான் வெளியிடுகிறதே தவிர, அழைத்துப்பேசப்பட்ட உறுப்பினர்கள் ஆடியோவை வெளியிடவில்லை.

அப்படி இருக்கும்போது ஆடியோ வெளியாகும் சம்பந்தப்பட்ட அதிமுக உறுப்பினர்களை அக்க்ட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் கட்சியிலிருந்து நீக்குவது சமயோதமல்ல என்கிற குரல் அதிமுகவிற்குள் எழுந்துள்ளது. இது அதிமுக தலைமைக்கு ஒருவித பதற்றத்தையே உருவாக்கி இருக்கிறது. இப்படி நடவடிக்கைகளில் இறங்குவது ஓ.பி.எஸ்- எடப்பாடி இருவருக்கும் பின்னடவை ஏற்படுத்துமே தவிர, அதிமுக நிர்வாகிகளை கலக்கமடையவே செய்யும். இப்படி கட்சியில் இருந்து அதிமுக நிர்வாகிகளை நீக்கும் முடிவை இரட்டை தலைமை மேற்கொண்டால் அதனை சாதகமாக்கி, மேலும் பல நிர்வாகிகளிடம் பேசி, அவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காகவே சசிகலா பேசுவார். அப்படிநீக்கப்படும் நிர்வாகிகள் சசிகலா பக்கம் அணி சாயக்கூடும்.

அதற்கு ஓ.பி.எஸும், எடப்பாடியாருமே அடிக்கோடிடுகிறார்கள். இருவரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாதகம். இல்லையென்றால் அது சசிகலாவுக்கு அதிமுகவை தாரை வார்த்ததை போன்றே ஆகி விடும். அதை சசிகலா தமக்கு சாதகமாக்கி வருகிறார். இது ஓ.பி.எஸ்- எடப்பாடிக்கு புரியவில்லையா? என்பது தெரியவில்லை. ஆனால், இந்த விஷயத்தை சசிகலா தனதாக்கிக் கொண்டு அரசியலில் செம மூவ் காட்டி வருகிறார்’’ என்கிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!