ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? போக்குவரத்து, வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதி? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.!

By vinoth kumarFirst Published Jun 25, 2021, 1:17 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் பக்தர்களுக்கு வழிபாடு நடத்த அனுமதிக்கலாமா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் பக்தர்களுக்கு வழிபாடு நடத்த அனுமதிக்கலாமா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கு வருகின்ற 28ம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த ஊரடங்கு தளர்வுகளின் போது மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டது. இதில் கொரோனா குறையாத கோயம்புத்தூர், நீலகிரி , திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர் , திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் எந்த தளர்வுகளும் அளிக்கப்படவில்லை. அதேசமயம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவில்கள், பேருந்து சேவையை தொடங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.இதில், அரசு உயர் அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனையில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கடந்த முறை தளர்வுகள் எதுவும் புதிதாக அறிவிக்கப்படவில்லை. இம்முறை அந்த மாவட்டங்களில் ஹார்டுவேர், மின்னனு பொருள்கள் விற்பனை கடைகள், புத்தகக டைகள், காலணி விற்பனை கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இங்கு ஏற்கனவே திறக்கப்பட்ட கடைகளுக்கு நேர நீட்டிப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. சிறியளவிலான நகைக்கடைகள், துணிக்கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும், சிறிய வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

click me!