கட்சியை அபகரிக்க நினைத்தால் சும்மா இருக்க மாட்டேன்.. பழைய சசியாக மாறிய சின்னம்மா..

By Ezhilarasan BabuFirst Published Jun 25, 2021, 12:54 PM IST
Highlights

தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் கட்சியை தன் பக்கம் கொண்டு போய்விடலாம் என யாராவது நினைத்தார்கள் என்றால் அது தவறு. இது தொண்டர்களின் கட்சி என சசிகலா அதிமுக தொண்டர் ஒருவருடன் பேசிய ஆடியோவில் கூறியுள்ளார். 

தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் கட்சியை தன் பக்கம் கொண்டு போய்விடலாம் என யாராவது நினைத்தார்கள் என்றால் அது தவறு. இது தொண்டர்களின் கட்சி என சசிகலா அதிமுக தொண்டர் ஒருவருடன் பேசிய ஆடியோவில் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலின்போது அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பதாக தெரிவித்த சசிகலா, தற்போது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிமுக தொண்டர்களுடன் பேசி அதற்கான  ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. கொரோனா தாக்கம் முடியட்டும், கட்டாயம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சித் தொண்டர்களை சந்தித்து, விரைவில் கட்சியை காப்பாற்றுவேன் என அவர் அதில் கூறி வருகிறார்.

அவர் அதிமுக தொண்டர்களிடம் பேசிவரும் ஆடியோ வெளியாவதையடுத்து, சசிகலாவுடன் பேசியவர்களை கட்சியில் இருந்தே தூக்கம் வேலையில் ஓபிஎஸ், இபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பெரியகுளத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகருடன் அவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறயிருப்பதாவது, கட்சி நல்ல இருக்க வேண்டும் என்று அன்றைக்கு ஆட்சி அமைத்து கொடுத்துவிட்டு சென்றேன். 

கடைசி நேரத்தில் அதனை செய்து கொடுத்துவிட்டு சென்றேன். இதுவரைக்கும் நான் நல்லது தான் செய்திருக்கிறேன்.தேர்தலில் அதிமுகவும்- அமமுகவும இணைந்து செயல்பட்டிருந்தால் மீண்டும் அதிமுக ஆட்சி தான் அமைந்திருக்கும். ஒரு சிலர் சுய நலமாக எடுத்த முடிவுனால் இன்றைக்கு ஆட்சி இழந்து நிற்கிறோம். அதிமுகவிற்கு பிளவு புதிதல்ல, இது இரண்டாவது முறை, நான் முதல் முறையை பார்த்துள்ளேன். அதில் வெற்றி பெற்றோம். இது இரண்டாவது முறை இதிலும் என்னால் வெற்றி பெற முடியும். 

தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் கட்சியை தன் பக்கம் கொண்டு போய்விடலாம் என யாராவது நினைத்தார்கள் என்றால் அது தவறு. இது தொண்டர்களின் கட்சி. அதிமுகவின் அடிப்படை சட்ட விதிகள் தொண்டர்களுக்கு தெரிகிறது ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை. இவர்கள் தலைவர் அம்மா செய்த திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவில்லை அதனால் பெரிய பாடம் இவர்களுக்கு கிடைத்துள்ளது. அதிமுகவின் பிரிவு திமுகவிற்கு சாதகமாகியுள்ளது. எல்லாமே தான் என்று அரசியலில் நினைப்பது தவறு. நிச்சயம் அனைவரையும் அரவணைத்து செல்வேன். இவ்வாறு கூறியுள்ளார்.
 

click me!