தமிழகத்திலேயே 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் கிராமம்.. கலைஞர் மாவட்டத்தில் அசத்தல்.!

By vinoth kumar  |  First Published Jun 25, 2021, 11:54 AM IST

தமிழக மக்களிடையே கொரோனா நோய் தொற்றுக்கு தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணத்தால் கிராமங்கள் முதல் மலைவாழ் மக்கள் வரை எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பெரிய அளவில் பெருகி இருக்கிறது.
 


கிராமங்கள் முதல் மலைவாழ் மக்கள் வரை எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பெரிய அளவில் பெருகி இருக்கிறது என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்திடும் பணிகள் மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழக மக்களிடையே கொரோனா நோய் தொற்றுக்கு தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணத்தால் கிராமங்கள் முதல் மலைவாழ் மக்கள் வரை எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பெரிய அளவில் பெருகி இருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 38 லட்சம் தடுப்பூசி வரவழைக்கப்பட்டு. அதில் சுமார் 1 கோடியே 28 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்றார். தற்போது சுமார் 8 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார். மேலும், இம்மாத இறுதிக்குள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். அதேபோன்று தேயிலை தொழிலாளர்கள் அனைவருக்கும் போட்டு முடிக்கப்படும். சுற்றுலா தளங்கள் (நாகூர், வேளாங்கண்ணி, கோடியக்கரை) இருக்கும் இடங்களில் விரைவில் தடுப்பூசி போடப்படும்.

திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் பூண்டி கே.கலைவாணனின் தீவிர முயற்சியினால் கொரடாச்சேரி ஒன்றியத்திலுள்ள கருணாநிதியை தமிழகத்திற்குத் தந்த அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் எனும் கிராமம் முன்மாதிரி கிராமமாக தெறிவு செய்யப்பட்டு அக்கிராமத்தில் முழுவதுமாக 100 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே முழுவதுமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட கிராமம் என்ற நற்பெயரை காட்டூர் கிராமம் பெற்றிருக்கிறது. இந்த கிராமத்தில்  3,332 பேரில் 18 வயதிற்கு மேல் கர்ப்பிணி பெண்கள் என கண்டறியப்பட்ட 998 பேரை தவிர்த்து, மீதமுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், டெல்டா வைரஸ் தொடர்பாக 1159 பேருக்கு பெங்களூருவில் மருத்துவ சோதனை செய்யப்பட்டது. அங்கு ஒருவரைத் தவிர அனைவரும் நெகடிவ் ஆக தான் இருந்துள்ளது. அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார். அப்படி இருந்த போதிலும் அவருடைய பயண விபரம், அவர் யாருடன் பழகியுள்ளார் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

click me!