17 வயது சிறுவனை பெங்களூருக்கு கொத்திக் கொண்டு போன தாய், மகள்.. வீட்டை வாடகைக்கு எடுத்து செய்த அசிங்கம்.

Published : Jun 25, 2021, 01:27 PM ISTUpdated : Jun 25, 2021, 05:41 PM IST
17 வயது சிறுவனை பெங்களூருக்கு கொத்திக் கொண்டு போன தாய், மகள்.. வீட்டை வாடகைக்கு எடுத்து செய்த அசிங்கம்.

சுருக்கம்

சென்னை புழல் பகுதியில் ஒரு வருடமாக காதலித்து வந்த 17 வயதுடைய சிறார்களை பாலியல் உறவுக்கு தூண்டிய சிறுமியின் தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

சென்னை புழல் பகுதியில் ஒரு வருடமாக காதலித்து வந்த 17 வயதுடைய சிறார்களை பாலியல் உறவுக்கு தூண்டிய சிறுமியின் தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் டேவிட் (43). ஆட்டோ ஓட்டுநரான இவரின் 17 வயது இளைய மகன் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது இளைய மகனை காணவில்லை என ஸ்டீபன் டேவிட் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஸ்டீபன் டேவிடின் இளைய மகன் வியாசர்பாடியைச் சேர்ந்த சிறுமியுடன், சிறுமியின் தாய் தூண்டுதலின் பேரில் மூவரும் பெங்களூருக்கு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் மூவரையும் மீட்டு சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது 17 வயது சிறுவன் 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில், சிறுமியின் தாயார் தூண்டுதலின் பேரில் 3 பேரும் சேர்ந்து பெங்களூர் சென்று ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்ததும், தாயாரின் தூண்டுதலின் பேரில் சிறுமியுடன் உடலுறவு வைத்துக் கொண்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து 3 பேரையும் மாதவரம் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்திய புழல் போலீசார் நடுவரின் உத்தவுப்படி இரு சிறார்களுக்கும் மன ரீதியான ஆலோசனை வழங்கவும், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு சிறார் காப்பகத்தில் அடைத்தனர். சிறார்களை பாலியல் உறவுக்கு தூண்டியதாக சிறுமியின் தாயார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!