அளவே இல்லாமல் அத்துமீறி போகும் கிரண்பேடியின் சேட்டைகள்...!

Asianet News Tamil  
Published : May 29, 2018, 05:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
அளவே இல்லாமல் அத்துமீறி போகும் கிரண்பேடியின் சேட்டைகள்...!

சுருக்கம்

kiran bedi actions

ஆளுநர்கள்  மாநிலத்தில் பெரும்பான்மை பெரும் அரசுகளை ஆட்சியில் அமைக்க பதவிப்பிரமாணம் செய்துவைப்பது. கல்லூரி, பல்கலைகழகங்களுக்கு சென்று பட்டமளிப்பது, குடியரசு மற்றும் சுதந்திர தினத்தில் கொடியேற்றுவது என்கிற வேலைகளை மட்டுமே செய்துவந்த காலமெல்லாம் மலையேறி போயச்சுங்க.

இப்போதெல்லாம் சொன்ன வேலைகளை விட சொல்லாத பல வேலைகளை ஆளுநரகள் செய்து  செய்திகளில் விடாமல் இடம்பெற்றுவிடுகிறார்கள்

பா.ஜ.க மத்தியில் ஆட்சியில் அமர்ந்தபிறகு ஆளுநர்கள் இன்னும் கூடுதலான வேலைகளையும் இன்னும் சொல்லப்போனால் ஆளும் மத்திய அரசு பா.ஜ.கவிற்கு ஆதரவாக ஆளுநர்கள் வேலை செய்யத் தொடங்கிவிட்டனர். இதற்கு கர்நாடக தேர்தல் முடிவில் ஆளுநரின் செயலை எடுத்துக்காட்டாக கூறலாம்.

புதுவையின் ஆளுநராக இருக்கும் கிரண்பேடி பதவியேற்றதில் இருந்து அதிரடியான பல வேலைகளை செய்து வருகிறார். திடீரென ஆய்வு என்று தன் படைகளை திரட்டி கிளம்புவதும். கிராமத்தை சுத்தமாக வைத்திருந்தால்தான் இலவச அரிசி என உத்திரவிடுவதுமாக இவரின் செயல்கள் மற்ற மாநிலத்து ஆளுநர்களின் செயலைவிட கூடுதலாகவே இருந்துவருகிறது.

மாநிலத்தின் முதலமைச்சரை கம்பன் விழாவில் தன் பேச்சை மொழிபெயர்க்க சொல்லி அழைப்பதும், முதலமைச்சர் உத்தரவின்றி முதலமைச்சர் நிதியில் ‘நீ பாதி நான் பாதி’ கொடுக்கவேண்டுமென கூறுவது என கிரண்பேடியின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.

இந்நிலையில் கிரண்பேடி ஆளுநராகி இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் இதற்காக ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் மற்ற அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதை அனைவரும் புறக்கணித்தனர்.

இதற்காக கிரண்பேடி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென முதலமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கே சென்று அவரை சந்தித்துள்ளார் கிரண்பேடி. திடீரென வந்ததால் நாராயணசாமி தயாராகி வந்து அவரைக் காண 15 நிமிடங்கள் ஆனது. பதவியேற்று இரண்டாண்டு ஆனதையொட்டி பார்க்க வந்ததாக கூறி தான்வந்துள்ளதாக கூறியுள்ளார். இருவரும் பரஸ்பரம் சால்வை போர்த்தி கெளரவித்துக் கொண்டனர்.

பார்க்கவர மாட்டேன் என்று சொல்லிய முதல்வரை கட்டாயம் பார்த்தே தீருவேன் எனக்கூறி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி செயல்படும் விதம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும் இதற்கு என்ன செய்ய வேண்டுமென தெரியாமல் திகைக்க வைக்கிறது.

பாஜகவின் ஆட்சியில் ஆளுநர்களின் செயல்கள் கர்நாடகத்தில் முன்னுக்குபின் முரணாக இருந்தது. மாறாக பாண்டிச்சேரியில் கிரண்பேடியின் செயல்கள் கட்சி தாண்டி நட்பு பாராட்டுவதாக இருந்தாலும் துளியும் பிடிக்கவில்லையென காங்கிரஸ் வட்டாரம் முணுமுணுக்கிறது.

PREV
click me!

Recommended Stories

கனிமக்கொள்ளையை தட்டிக்கேட்ட செய்தியாளர்கள் மீது தாக்குதல்.. திமுக MLA கைதாகணும்.. எதிர்க்கட்சிகள் ஆவேசம்!
ராமதாஸ் கூட்டணியில் விசிக இருக்காது.. திருமாவளவன் திட்டவட்டம்.. திமுகவுக்கு தலைவலி!