கொள்ளிப்போட இருந்த ஒரே மகனை கொன்னுட்டாங்க... இனி பிழைப்புக்கு என்ன பண்ணப்போறேன்? ஆளுநரிடம் கதறிய பெண்

Asianet News Tamil  
Published : May 29, 2018, 04:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
கொள்ளிப்போட இருந்த ஒரே மகனை கொன்னுட்டாங்க... இனி பிழைப்புக்கு என்ன பண்ணப்போறேன்? ஆளுநரிடம் கதறிய பெண்

சுருக்கம்

govt kill my only son

எனக்கு கொள்ளிப்போட இருந்த ஒரே மகனை கொன்று விட்டார்கள் என்றும், அப்பாவியான என்னுடைய ஒரே மகனை இழந்து விட்டேன். இனி பிழைப்புக்கு நான் என்ன செய்வேன் என்று, ஆறுதல் கூறவந்த ஆளுநரிடம், கதறினார் தூத்துக்குடி பெண்.

தூத்துகுடியில் ஆளுநர் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடி வந்தனர். 100-வது நாளில் போடப்பட்ட 144 தடை உத்தரவை மீறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர் 19 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறும் வகையில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர்கள் ஜெயக்குமர், கடம்பூர் ராஜு ஆகியோர் தூத்துக்குடிக்கு சென்றனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண தொகையும் வழங்கினர்.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக அரசாணை ஒன்றையும் வெளியிட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கும் சென்று ஆளுநர் ஆறுதல் கூறி வருகிறார்.

பேய்க்குளம் என்னும் கிராமத்தில் வசித்து வந்த செல்வசேகர் (40) நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். அவரது வீட்டுக்கு சென்ற ஆளுநர் பன்வாரிலால்,  செல்வசேகர் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். செல்வசேகர் வீட்டில் இருந்த அவரது தாயார் கதறி அழுதார். அப்போது அவர் ஆளுநரிடம், என் கணவர் இறந்தபிறகு, செல்வசேகர் வருமானத்தில்தான் எங்களது குடும்பம் நடந்து வந்தது. 22 ஆம் தேதி அன்று என் மகன் வேலைக்கு சென்றான். ஸ்டெர்லைட் போராட்டம் காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது வீட்டுக்கு செல்லுங்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இதையடுத்து, செல்வசேகர் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த போலீசார் என் மகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்தகாயமடைந்த அவன் மருத்துவமனையில் உயிரிழந்தான். எனக்கு கொல்லிப்போட இருந்த ஒரே மகனை கொன்னுட்டாங்க... அப்பாவியான என்னுடைய ஒரே மகனை இழந்துட்டேன்.. இனி பிழைப்புக்கு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று செல்வசேகரின் தாயார் கதறி அழுதார்.

PREV
click me!

Recommended Stories

அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!
தமிழ் நாட்டில் இருந்து வந்த புழு..! பூச்சி அண்ணாமலை எங்களை மிரட்டுவதா..? வெடிக்கும் சிவசேனா..!