திரைப்படத்தில் மட்டுமல்ல அரசியலிலும் நட்சத்திரமாக ஜொலிக்கிறார் குஷ்பு..பரப்புரையில் புகழ்ந்து தள்ளிய முதல்வர்

By vinoth kumarFirst Published Mar 29, 2021, 8:26 PM IST
Highlights

திரைத்துறையை போன்று அரசியலிலும் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் குஷ்பு. சிறந்த பேச்சாளர், திறமையாவனர். ஆயிரம் விளக்கு தொகுதி மக்களுக்கு தேவையான நன்மை செய்ய அறிய வாய்ப்பை தாருங்கள் தாருங்கள் என இருகரம் கூப்பி வேண்டி அன்புபோடு கேட்டுக்கொள்கிறேன். 

திரைத்துறையை போன்று அரசியலிலும் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் குஷ்பு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில்;- திரைத்துறையை போன்று அரசியலிலும் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் குஷ்பு. சிறந்த பேச்சாளர், திறமையாவனர். ஆயிரம் விளக்கு தொகுதி மக்களுக்கு தேவையான நன்மை செய்ய அறிய வாய்ப்பை தாருங்கள் தாருங்கள் என இருகரம் கூப்பி வேண்டி அன்புபோடு கேட்டுக்கொள்கிறேன். 

நமது கூட்டணி வெற்றி கூட்டணி. நமது வேட்பாளர் அனைவரும் வெற்றி பெறுவார்கள். குஷ்பு வெற்றி பெற்று வந்தால் நீங்கள் வைக்கும் கோரிக்கையை டெல்லி வரைக்கும் கொண்டு செல்வார். தமிழ்நாட்டு மக்களின் நன்மைகளை மத்தியில் இருந்து போராடி பெற்று தரக்கூடிய ஆற்றல் மிகு வேட்பாளர் குஷ்பு. மாநிலத்தில் எந்த ஒரு திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதி வேண்டும். அதற்கு தேவையான நிதி வேண்டும். அதை எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அதை போராடி பெறக்கூடியவர் குஷ்பு. 

மத்திய அரசுடன் இணக்கமான உறவு இருந்தால் தான் மாநிலம் வளர்ச்சியடைய முடியும். தொழில் வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பை மத்திய அரசுதான் கொடுக்கிறது. அதிமுக தலைவர்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை விமர்சிப்பதையே ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என நினைக்கும் கட்சி திமுக. திமுக எப்படிப்பட்ட கட்சி, தற்போது எப்படி இருக்கிறது. திமுகவில் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே பதவி தருவார்கள், மற்றவர்கள் வீதியில்தான் நிற்க வேண்டும்.

அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வராக வர முடியும். திமுகவில் அப்படி தர முடியுமா? சிறுபான்மை மக்கள் மகிழ்ச்சியுடன் பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம். அதிமுகதான் மக்களுக்கு நன்மை செய்து பாதுகாக்கின்ற இயக்கம். பாஜகவோடு கூட்டணி வைத்தது குறித்து தவறான அவதூறுகளை பரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மக்களுக்கு விரைவாக நன்மைகள் கிடைக்கவும், தமிழகம் வளர்ச்சி பெறவும் பாஜகவோடு கூட்டணி வைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

click me!