ஆ.ராசா போல் பாமகவில் யாரேனும் பேசியிருந்தால் அடி, உதை விழும்... ஸ்டாலினை பங்கம் செய்த அன்புமணி..!

Published : Mar 29, 2021, 06:52 PM IST
ஆ.ராசா போல் பாமகவில் யாரேனும் பேசியிருந்தால் அடி, உதை விழும்... ஸ்டாலினை பங்கம் செய்த அன்புமணி..!

சுருக்கம்

திமுக எம்.பி. ஆ.ராசா போல் பாமகவில் யாராவது பேசியிருந்தால் கட்சியில் இருந்து நீக்குவதுடன் அடித்து உதைத்து அனுப்பியிருப்போம்  என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

திமுக எம்.பி. ஆ.ராசா போல் பாமகவில் யாராவது பேசியிருந்தால் கட்சியில் இருந்து நீக்குவதுடன் அடித்து உதைத்து அனுப்பியிருப்போம்  என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்;- கொச்சையாக பேசும் ஆ. ராசவை இதுவரை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க கூட இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது பெண்களை பற்றி எந்த மதிப்பும், மரியாதையும் ஸ்டாலினுக்கு கிடையாது. தாயை இழிவாக பேசும் நபரை நிச்சயம் மன்னிக்க முடியாது. 

பாமகவில் இவ்வாறு யாரவது பேசி இருந்தால் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீங்கியதுடன், உதைத்து அனுப்பி இருப்போம் என்று பேசினார்.

திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பீடு செய்து ஆ. ராசா பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்ததையடுத்து,  திமுக கண்ணியக் குறைவாகப் பேசுவதை அனுமதிக்காது என ஸ்டாலின் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!