குஷ்புவுக்கு என்னைவிட அனுபவம் அதிகம்.. அதனால் அவருக்கு சீட்டு.. நமிதா தாறுமாறு..

By Ezhilarasan BabuFirst Published Mar 25, 2021, 12:28 PM IST
Highlights

உங்களுக்கு பின் கட்சியில் சேர்ந்த குஷ்பூக்கு சீட் கிடைத்துள்ளது உங்களுக்கு சீட் இல்லையா என்ற கேள்விக்கு? ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும், அனுபவம் தான் இங்கு முக்கியம்.

சென்னை கோயம்பேட்டிலுள்ள தமிழக பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காயத்திரி தேவி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய காயத்திரி, நாடு முன்னேற அனைத்து மக்களும் முன்னேற வேண்டும், குறிப்பாக பெண்களும் முன்னேற வேண்டும். பெண் என்பவள் பல இன்னல்களை சமாளித்து முன்னேறுபவள். பிரதமர் மோடி பெண்கள் முன்னேறும் விதமாக பல விதங்களில் செயல்படுகிறார்.பாதுகாப்பு துறை அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீத்தாராமனை நியமித்தார். மற்றும் முஸ்லீம் பெண்களுக்காக முத்தலாக் சட்டத்தை தடை செய்தார். 

அவரது பிறந்த நாளை கேக் வெட்டி அவர்கள் கொண்டாடினர். சுவச் பாரத்  திட்டத்தின் கீழ் 56லட்சம் கழிப்பறைகள் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ளது. தமிழ்கத்தில் மட்டும் 35 லட்சம் கேஸ் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சம உரிமை கொடுத்துள்ளது மத்திய அரசு. கூட்டணி கட்சியான அதிமுக தொட்டில் குழந்தை திட்டம் என முக்கிய திட்டம், தாலிக்கு தங்கம் கொடுக்கும் திட்டம் என பல முக்கிய திட்டவ்கள், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என பல திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். 

அம்மா குழந்தை கிட் திட்டம் மூலம் பிரவசவமான பெண்ணுக்கு தேவையானவற்றை கொடுத்துள்ளார்கள். மத்திய மாநில அரசு இரட்டை குழல் துப்பாக்கி போல் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் திமுக, விசிக எப்போது நேரம் கிடைத்தாலும் பெண்களை விமர்சிக்கிறார்கள். ராகுல் பிரச்சாரம் செய்வதால் காங்கிரஸ் பலம்பெறுமா என்ற கேள்விக்கு வெஜ் பிரியாணி, ஆனியன் ரைத்தா செய்வது எப்படி பலமாகும். மதத்தின் பெயரால் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். அது எப்படி மதசார்பற்ற கூட்டணியாகும். இங்கு இந்து கோவில் கட்டுவதற்கு முஸ்லீம்களும், தர்கா கட்ட இந்துக்களுக்கும் நன்கொடை தருகிறார்கள். இது எப்படி மதசார்பாகும் என்றார். பின்னர் பேசிய நமிதா, உங்களுக்கு பின் கட்சியில் சேர்ந்த குஷ்பூக்கு சீட் கிடைத்துள்ளது உங்களுக்கு சீட் இல்லையா என்ற கேள்விக்கு?  

ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும், அனுபவம் தான் இங்கு முக்கியம். அந்தவகையில் அவருக்கு கிடைத்துள்ளது என்றார்.  அதிமுகவில் இருந்த போது பிரச்சாரம் செய்தீர்கள் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்ய போகிறீர்கள், தேர்தல் களம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நான் திமுகவில் இருந்தேன் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை, பாஜகவிற்கு தான் பிரச்சாரத்திற்கு செல்லவுள்ளேன்.. என கூறினார். அதாவது அதிமுக என்பதற்கு திமுக என மாற்றி கூறினார். 
 

click me!