#BREAKING அட கடவுளே.. கொரோனாவில் சிக்கிய மேலும் ஒரு தேமுதிக வேட்பாளர்.. அதிர்ச்சியில் பிரேமலதா..!

Published : Mar 25, 2021, 12:22 PM IST
#BREAKING அட கடவுளே.. கொரோனாவில் சிக்கிய மேலும் ஒரு தேமுதிக வேட்பாளர்.. அதிர்ச்சியில்  பிரேமலதா..!

சுருக்கம்

விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், வேட்பாளர்கள் கொரோனா மற்றும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சில இடங்களில் வேட்பாளர்கள் களத்தில் இல்லாமல் வாக்கு சேகரிப்புகள் நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பொன்ராஜ் மற்றும் சந்தோஷ்பாபு ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், தேமுதிகவில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், எல்.கே.சுதீஷ் ஆகியோருக்கு தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சளி தொல்லை இருந்ததையடுத்து  பார்த்தசாரதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து தேமுதிக வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அக்கட்சியின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?