பதவியில் இருந்து நீக்காவிட்டால் குஷ்பு தூக்குப்போட்டுக் கொள்வாரா? என்ன பேசணுமோ அத மட்டும் பேசுங்க...! திருநாவுக்கரசர் காட்டம்...!

First Published May 16, 2018, 11:11 AM IST
Highlights
Khushboo confrontation with Tamil Nadu Congress leader Thirunavakkara


குஷ்பு வகித்து வரும் பதவிக்கு என்ன பேச வேண்டுமோ அதைத்தான் பேச வேண்டும் என்றும் இரண்டு மாதத்தில் என்னை நீக்காவிட்டால் அவர் தூக்கு மாட்டிக் கொள்வாரா? என்று தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தமிழக காங்கிரஸ் குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்திருந்தார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி செயலற்று உள்ளது என்றும், அடுத்த இரண்டு மாதங்களிலேயே கட்சியின் மாநில தலைவர் மாற்றப்படுவார் என்றும் கூறியிருந்தார்.
காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைத்து மக்களிடம் கொண்டு செல்லும் ஒருவரையே மாநிலத்தன் புதிய தலைவராக தேர்வு செய்ய கட்சி தலைமை விரும்புவதாகவும், பல்வேறு தலைவர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். தற்போதைய தமிழக காஙகிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்னும்கூட சிறப்பாக பணியாற்றி இருக்கலாம் என்றும் பேட்டியில் கூறியிருந்தார். இது குறித்து தமிழக காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசும்போது, குஷ்பு வகித்து வரும் பதவிக்கு என்ன பேச வேடுமோ? அதைத்தான் பேச வேண்டும் என்று கடுமையாக கூறியுள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகரில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்,முன்னாள் காங். எம்.பி., விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திருநாவுக்கரசர், இரண்டு மாதத்தில் என்னைத் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்று குஷ்பு சொல்கிறார். அவர் வகித்து வரும் பதவிக்கு என்ன பேச வேண்டுமோ அதைத்தான் பேச வேண்டும். இரண்டு மாதத்தில் என்னை நீக்காவிட்டால் அவர் தூக்குமாட்டிக் கொள்வாரா? என்று கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தியோ அல்லது கட்சி தலைமையில் உள்ள முக்கிய பிரமுகர்களோதான் இதை அறிவிக்க முடியும். யார் சொல்லி இவர் இப்படி சொல்கிறார்? என்றார். அப்போது அவர் குஷ்புவுக்காக குட்டி கதை ஒன்றைக் கூறினார். ஒரு ஊரில் கோயில் தேர் ஒன்று இருந்தது. அந்த ஊர்மக்கள் கோயில் சாமியைத் தேரில் வைத்து ஊர் முழுக்க வைத்துக் கொண்டாடி வந்தார்கள்.

நம்மையும் சேர்த்துதான் மக்கள் வணங்குகிறார்கள் என்று தேர் பெருமைப்பட்டுக் கொண்டுது. நாம் மட்டும் ஊரைச் சுற்றி வந்தால் எப்படி இருக்கும் என்று தேர் நினைக்க ஆரம்பித்தது. ஒரு நாள் தேர் மட்டும் ஊருக்குள் தனியாக சென்றுது, ஆனால் யாரும் பூஜை செய்யவில்லை. இதனால் தேர் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நின்று விட்டது. அதுபோல்தான் சிலர் சப்பரமாக (தேராக) இருந்து கொண்டு தங்களை சாமியாக நினைத்துக்
கொள்கிறார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய கட்சியினரும், குஷ்புவுக்கு எதிராகவே பேசினர். தமிழக காங்கிரசில் குஷ்புவுக்கும் திருநாவுக்கரசருக்கும் மோதல் வலுத்துள்ள நிலையில், தலைமைக்கான யுத்தம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

click me!