ஆளூநர் கைகாட்டியவறே சபாநாயகர் - கடைசி நேரத்தில் காங்கிரஸை கைவிட்ட சுப்ரீம் கோர்ட்

Asianet News Tamil  
Published : May 19, 2018, 11:25 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
ஆளூநர் கைகாட்டியவறே சபாநாயகர் - கடைசி நேரத்தில் காங்கிரஸை கைவிட்ட சுப்ரீம் கோர்ட்

சுருக்கம்

KG Bopaiah is speaker suprem court judgement

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு தொடுத்தது.கே.ஜீ.போப்பையா பாரபட்சமாக செயல்படுவதாக உச்சநீதிமன்ற கண்டனத்துக்கு ஆளானவர். வழக்கின் விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. இடைக்கால சபாநாயகராக கே.ஜி.போப்பையாவை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதனை நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையில் 3 நீதிபதிகள் விசாரிக்கிறார்கள்.

இந்த வழக்கில் காங்கிரஸ்  சார்பில் கபில்சிபில் வாதாடுகிறார். போப்பையா நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது. மரபுப்படி அனுபவம் வாய்ந்தவரே சபாநயாகராக பதவியேற்க வேண்டும். போப்பைய்யா அனுபவம் மிக்கவர் அல்ல காங்கிரஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

போப்பையா நியமனத்தை கேள்வி எழுப்பினால் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இன்று நடக்கயிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளி வைக்கலாமா? எனக் கேள்வி எழுப்பியது நீதிமன்றம்.

வாக்கெடுப்பு தள்ளிவைக்கக் கூடாது என கபில்சிபில் வேண்டுகோள். போப்பையாவை விசாரிக்காமல் அவர் நியமனத்தை கேள்வி கேட்க முடியாது என நீதிபதி பதிலளித்தனர்.

பின் போப்பையா நீடிப்பார் என்றும் அவர் தலைமையிலே நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும். எனக் கூறி காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்தார் நீதிபதி

PREV
click me!

Recommended Stories

திமுகவில் சர்ப்ரைஸ்.. அதிமுகவில் பாமகவுக்கு வாய்ப்பு.. ராஜ்ய சபா வேட்பாளர்கள் லிஸ்ட் இதோ!
கை நழுவிப்போன காங்கிரஸ்.. பாஜக கூட்டணியில் விஜய்..? அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்..!