பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவது கருத்து சுதந்திரம் அல்ல.. கேரள அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய கோர்ட்..!

By vinoth kumarFirst Published Jul 28, 2021, 1:36 PM IST
Highlights

இந்த மேல்முறையீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ பொதுச்சொத்துகளை எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் சேதப்படுவத்துவது கருத்து சுதந்திரம் அல்ல.

சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ பொதுச்சொத்துகளை எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் சேதப்படுவத்துவது கருத்து சுதந்திரம் அல்ல என கேரள எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

கேரளாவில் கடந்த 2015ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது  நிதியமைச்சராக இருந்த கே.எம்.மாணி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது மாநிலத்தில் மதுபான பாா்களை அனுமதிக்க லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிதி அமைச்சர் கே.எம்.மாணி பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தினர். இதனால், சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டு தற்போது ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்த மைக்குகள், நாற்காலிகள் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சட்டப்பேரவைக்குள் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினரான இடது ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி முன்னணி ஆட்சிக்கு வந்தது. பேரவை அமளி வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 12-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ பொதுச்சொத்துகளை எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் சேதப்படுவத்துவது கருத்து சுதந்திரம் அல்ல. மேலும், எம்எல்ஏ, எம்பிக்களுக்கு வழங்கியிருக்கக்கூடிய பதவி என்பது எந்தவிதமான தடையும் இல்லாமல், எதற்கும் பயப்படாமல் அவையில் தங்களுக்கான பொதுப் பணியை செய்வதற்காக தானே தவிர இதுபோன்று கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு அல்ல நீதிபதிகள் கூறியதை அடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். 

click me!