வேலைக்கு ஆகாது ராஜா, வேலைக்கே ஆகாது.. டிடிவி தினகரனை மரண பங்கம் செய்த ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Jul 28, 2021, 1:19 PM IST
Highlights

அதற்கு பதில் அளித்த அவர், சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவுக்கு தொடர்பில்லாதவர்கள். அவர்கள் கட்சியை மீட்பதெல்லாம் ஆகாத கதை. தன்னுடைய கட்சியையே ஒழுங்காக நிலைநிறுத்தத் முடியாத டிடிவி தினகரன், அதிமுகவை கைப்பற்ற போகிறாரா? அதாவது, கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்ட கதையாக இது இருக்கிறது.

சசிகலாவும் டிடிவி தினகரனும் அதிமுகவை கைப்பற்றுவது என்பது நடக்காத காரியம் என்றும், கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் பார்க்க ஆசைப்பட்ட கதையாக அல்லவா இருக்கிறது இது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நையாண்டியாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், அது தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், குறிப்பாக நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலைக்குறைப்பு போன்ற  வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றும், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டது எனக் கூறி,  தமிழகம் முழுவதிலும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி வேலுமணி, செல்லூர் ராஜு ஆகியோர் அந்தந்த பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது, திமுகவை விமர்சித்து ஜெயக்குமார் பாட்டுப்பாடி போராட்டம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,  ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சி பிடித்திருக்கிறது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம் வழங்கப்படும் என்றும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், நீட் தேர்வு ரத்து செய்யபடும் என்பன உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை என்றார். 

ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்வதாகத்தான் இருக்கும் என ஸ்டாலின் கூறினார். ஆனால் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை என திமுகவை விமர்சித்தார். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் சசிகலா மற்றும் தன்னுடைய நோக்கம் என்ன கூறி இருக்கிறாரே என ஜெயக்குமார் இடத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அவர், சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவுக்கு தொடர்பில்லாதவர்கள். அவர்கள் கட்சியை மீட்பதெல்லாம் ஆகாத கதை. தன்னுடைய கட்சியையே ஒழுங்காக நிலைநிறுத்தத் முடியாத டிடிவி தினகரன், அதிமுகவை கைப்பற்ற போகிறாரா? அதாவது, கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்ட கதையாக இது இருக்கிறது. அதெல்லாம் இங்க நடக்கவே நடக்காது என்று ஜெயக்குமார் திட்டவட்டமாகக் கூறினார்.
 

click me!