அதிமுக என்பது குடும்ப கட்சி அல்ல.. யாரும் கைப்பற்ற முடியாது.. சீறிய ஓபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jul 28, 2021, 12:45 PM IST
Highlights

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் முழுமையாக திமுக செய்யவில்லை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது

கல்வித் துறையில் மிகப்பெரிய மறுமலர்ச்சி உருவாக்கியது அதிமுக அரசு, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடியது அம்மாவின் அரசு, கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து துறையிலும் தலை சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியது அதிமுக. எங்கள் ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர், சட்ட ஒழுங்கை காப்பாற்றப்பட்டு அமைதி  பூங்காவாக திகழ்ந்தது. கடந்த பத்தாண்டு கால ஆட்சி ஒரு சிறப்புமிக்க ஆட்சியாக இருந்தது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியை சார்ந்த முன்னோடி தலைவர்கள் அனைவரும் பொய்யான வாக்குறுதிகளை கூறினர். திமுக தேர்தல் அறிக்கையில் மொத்தம் 505 வாக்குறுதிகள் தரப்பட்டது. ஆட்சி பொறுப்பேற்ற இந்த மூன்று மாத காலத்திற்குள் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை. 

சில முக்கியமான பிரச்சனைகளில் கூட அவர்களால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை, வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாக திமுக அரசின் நடவடிக்கையும், ஆட்சியும் உள்ளது. தமிழகம் முழுவதும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்கள் விரோத அரசாகத்தான் செயல்படுகிறது. திமுக ஆட்சிபொறுப்பு ஏற்றவுடன் அதன் செயல்பாடுகளை அதிமுகவினர் கூட பாராட்டினீர்களே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த நிலையிலும் நாங்கள் திமுகவை  பாராட்டவில்லை எனக் கூறினார். திமுக ஆட்சியில் கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் முழுமையாக திமுக செய்யவில்லை,

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது, நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரையில் ஒரு தனிப்பட்ட குடும்பமோ, ஒரு தனிப்பட்ட நபரோ அதிகாரம் செலுத்த முடியாது. அதிமுகவை  ஜனநாயக முறைப்படி நானும், எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் கட்சியை நிர்வகித்துக்கொண்டிருக்கிறோம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை யாரும் கைப்பற்ற முடியாது என உறுதிபட கூறினார். 

 

click me!