அண்ணாமலைக்கு ஆளுநர் கொடுத்த அட்வைஸ்..! ராஜ்பவனில் நடந்தது என்ன?

By Selva KathirFirst Published Jul 28, 2021, 12:20 PM IST
Highlights

அண்மையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை வந்து அவர் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். இதன் பிறகு கடந்த வாரம் திடீரென அண்ணாமலை, ஆளுநர் மாளிகை சென்றார். அங்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். 

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதும் ராஜ்பவன் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆசி பெற்று திரும்பியுள்ளார் அண்ணாமலை.

அண்மையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை வந்து அவர் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். இதன் பிறகு கடந்த வாரம் திடீரென அண்ணாமலை, ஆளுநர் மாளிகை சென்றார். அங்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். தமிழகத்தை பொறுத்தவரை அரசியல் கட்சி பிரமுகர்கள், தலைவர்கள் ஆளுநர்களை சந்திப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஒரு கட்சியின் தலைவராகவோ, நிர்வாகியாகவோ தேர்வு செய்யப்பட்ட பிறகு நேரில் சென்று வாழ்த்து பெறுவது, ஆசி பெறுவது என்பது இதுவரை நடந்தது இல்லை.

ஆனால் சென்னையில் பதவி ஏற்றுக் கொண்ட பிறகு சில நாட்களிலேயே சக பாஜக நிர்வாகிகளோடு ஆளுநர் மாளிகை சென்று திரும்பியிருக்கிறார் அண்ணாமலை. வழக்கமாக ஆளுநரை சந்திக்கும் தலைவர்கள் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசுவதும் வழக்கம். அன்றைய தினம் கூட ஆளுநரை சந்தித்த பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக செய்தியாளர்கள் அதிக அளவில் ஆளுநர் மாளிகை முன்பு திரண்டிருந்தனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் அண்ணாமலை வரவில்லை. இவ்வளவு நேரமாகவே மீட்டிங் நடக்கிறது என செய்தியாளர்கள் விசாரித்த போது, ஆளுநர் மாளிகையின் மற்றொரு வாயில் வழியாக அண்ணாமலை புறப்பட்டுச் சென்று இருந்தார்.

அதாவது ஆளுநர் சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பை அண்ணாமலை தவிர்த்துள்ளார். வழக்கமாக அண்ணாமலை இப்படி செய்யக்கூடியவர் இல்லை. ஆனால் அன்றைய தினம் அப்படி செய்ததற்கு காரணம் உள்ளது என்கிறார்கள். ஆளுநருடனான சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல் குறித்த  மிக முக்கிய விஷயங்களை அண்ணாமலை பேசியதாக கூறுகிறார்கள். அதோடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் திமுக மட்டும் அல்லாமல் அதிமுக குறித்தும் மிக முக்கிய தகவல்களை அண்ணாமலையோடு ஷேர் செய்து கொண்டதாக கூறுகிறார்கள்.

மேலும் இந்த சந்திப்பின் போது சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் பாஜக ஆதரவாளர்கள், இந்துத்துவவாதிகளை குறி வைத்து திமுக அரசு நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக பேசப்பட்டதாக கூறுகிறார்கள். மேலும் அந்த கவகையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் விவரங்களை ஆளுநரிடம் அண்ணாமலை பகிர்ந்து கொண்டதாகவும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் உள்ள சிலரை ஜாமீனில் விடுதலை செய்ய ஆளுநர் உதவ வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இது தவிர குடியரசுத் தலைவர் விரைவில் தமிழகம் வர உள்ள நிலையில் அது குறித்தும் பேசப்பட்டதாக கூறுகிறார்கள்.

click me!