எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இதுபோல நடக்கிறது.. ஓபிஎஸ் விளாசல்.!

Published : Jul 28, 2021, 12:10 PM IST
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இதுபோல நடக்கிறது.. ஓபிஎஸ் விளாசல்.!

சுருக்கம்

தமிழகத்தில் தற்போதுள்ள திமுக அரசு மக்களுக்கு பயன்படாத அரசாக உள்ளது. அதிமுக ஆட்சியில் கல்வி, சமூக பொருளாதாரம் மற்றும் சட்டம், ஒழுங்கில் முன்னிலையில் இருந்தது. 10 ஆண்டுகள் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தது அதிமுக அரசு.  

திமுக தலைவர் ஸ்டாலின் முதல் கடைநிலை பேச்சாளர்கள் வரை பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது இல்லம் முன்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்;- தமிழகத்தில் தற்போதுள்ள திமுக அரசு மக்களுக்கு பயன்படாத அரசாக உள்ளது. அதிமுக ஆட்சியில் கல்வி, சமூக பொருளாதாரம் மற்றும் சட்டம், ஒழுங்கில் முன்னிலையில் இருந்தது. 10 ஆண்டுகள் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தது அதிமுக அரசு.  

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாக திமுக திகழ்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல் கடைநிலை பேச்சாளர்கள் வரை பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர். தேர்தல் முடிவில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் வாக்கு வித்தியாசம் வெறும் 3 சதவீதம் மட்டுமே. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்கள் விரோத அரசாகவே திகழ்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியதில்  அதிமுக அரசே சிறந்த அரசாக விளங்கியது. 

மேலும், உச்சநீதிமன்றத்தின் மூலமாக காவிரி நீரை முழுவதுமாக பெற்று அரசாணையை பெற்று தந்தது அதிமுக அரசு. காவிரி நீர் பெற்றுத்தந்தது தொடர்பாக எந்த கட்சியும் உரிமை கொண்டாட முடியாது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!
Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!