எனக்கும் இந்தி தெரியாது... வேறு மொழியில சொல்லுங்க... மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன்..!

Published : Jul 28, 2021, 12:58 PM IST
எனக்கும் இந்தி தெரியாது... வேறு மொழியில சொல்லுங்க... மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன்..!

சுருக்கம்

திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தி தெரியாது போடா என்கிற வாசகங்களை முன் வைத்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது நீதிபதியும் தனக்கு இந்தி தெரியாது எனக்கூறி மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து ஞானசேகரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் எனக்கும் இந்தி தெரியாது என தெரிவித்த நீதிபதி வைத்தியநாதன் இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். 

புதுவையில் நியமன எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  வழக்கறிஞர் ஞானசேகரன் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு இது தொடர்பாக அளித்த பதில் தகவல்கள் இந்தியில் இருந்துள்ளன. இந்தியில் பதில் அனுப்பப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ஞானசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தவழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கும் இந்தி தெரியாது என தெரிவித்த நீதிபதி, ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

ஏற்கெனவே திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தி தெரியாது போடா என்கிற வாசகங்களை முன் வைத்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது நீதிபதியும் தனக்கு இந்தி தெரியாது எனக்கூறி மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

PREV
click me!

Recommended Stories

இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என். நேரு தரப்பு திட்டம்..? அமலாக்கத்துறை பகீர் தகவல்..!
நீதித்துறையில் மணி மகுடம்..! 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!