டியர் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்.. ஆகஸ்ட் 9 முதல், ரெடியாகிக்குங்க.. உயர்கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jul 28, 2021, 1:33 PM IST
Highlights

அண்ணா பல்கலைக்கழகத்தில், அனைத்து பாடத்திலும் அரியர் வைக்கும் மாணவர்கள் அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு படிக்க முடியும் என்ற நடைமுறை தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அண்ணா பல்கலைக்கழகத்தை போலவே மற்ற கல்லூரிகளிலும் மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும், இதுத்தொடர்பாக பரிசீலனை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார். 

மேலும், பொறியியல் சேர்க்கைக்காக நேற்று வரை 41,363 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார். தமிழகம் முழுவதிலும் உள்ள 143 அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1,26,748 நபர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், மாணவர்களே கல்லூரிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றும், விருப்பப்படும் கல்லூரிக்கு நேரடியாகவும் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் கூறினார். அண்ணா பல்கலைக்கழகத்தில், அனைத்து பாடத்திலும் அரியர் வைக்கும் மாணவர்கள் அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு படிக்க முடியும் என்ற நடைமுறை தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்லூரி திறப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்தி முடிவெடுக்கப்படும் என கூறிய அவர், கொரோனா காலக்கட்டம் என்பதால் தனியார் கல்லூரிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக கூறினார். பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். 
 

click me!