கேரள சட்டப்பேரவையில் சுவாரஸ்யம்.. தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்த தேவிக்குளம் எம்எல்ஏ..!

By vinoth kumarFirst Published May 25, 2021, 12:09 PM IST
Highlights

கேரளாவின், தேவிகுளம் சட்டப்பேரவை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராஜா தமிழில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றுக்கொண்டார்.

கேரளாவின், தேவிகுளம் சட்டப்பேரவை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராஜா  தமிழில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றுக்கொண்டார்.

கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளில், 99 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி கைப்பற்றியது. மீதமுள்ள 41 தொகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி வென்றது. 

இந்நிலையில், கேரளாவின் வரலாற்றில் 2ம் முறையாக பினராய் விஜயன் தலைமையிலான புதிய அரசு கடந்த 20ம் தேதி  பதவி ஏற்றது. தொடர்ந்து 15வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. 140 எம்எல்ஏக்களுக்கு  தற்காலிக சபாநாயகர் ரஹீம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆங்கில  அகர வரிசைப்படி உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். இரண்டு எம்எல்ஏக்களை தவிர, மற்ற அனைவரும் மலையாளத்திலும், சிலர் ஆங்கிலத்திலும் உறுதிமொழி எடுத்தனர். 

இதில், மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ராஜா தமிழில்  பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். வழக்கறிஞரான இவர் கோவை சட்டக்கல்லூரியில் படித்தவர். இடுக்கி மாவட்டம் தேவிகுளம்  தொகுதியில் போட்டியிட்ட ராஜா 7,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!