
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சரின் உடல்நிலை 95 சதவீதம் தேறி வருவதாக தமிழக (பொறுப்பு) ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். பூரண உடல் நலம் பெற்று வருகிற முதலமைச்சர் ஜெயலலிதா வரும் தீபாவளி அன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதாகவும் கூறப்படுகிறது.
நலமடைந்து வரும் முதலமைச்சர், மருத்துவரிடம் பேசினார்; சசிகலாவை பார்த்து புன்னகைத்தார்; இதுபோன்ற தகவல்கள் மூலம் ஜெயலலிதா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விரைவில் வீடு திரும்புகிறார் என்ற தகவலால் அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக நிர்வாகிகள் என அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
வரும் தீபாவளி அன்று அப்போலோவில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா வீடு திரும்புவதாக வெளிவரும் தகவலை அடுத்து அவரை வரவேற்க விசேஷ ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகமே ஒன்று திரளப் போகும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் கருணாசின் புலிப்படையும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதற்காக சுமார் ஒரு லட்சம் குதிரைப் படை வீரர்களைத் திரட்டி போயஸ் கார்டன் வரை அணிவகுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், சசிகலா நடராஜனுக்கும் யானைகள் மாலையிட்டு வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், அப்போலோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் வரை விடாது சரவெடிகள் வெடிக்கும் வண்ணம், வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கு பிரபல பட்டாசு நிறுவனமான காளீஸ்வரி நிறுவனம் இந்த பணியை மேற்கொள்ளப்படுகிறது. தொடர் சரவெடி கின்னஸ் சாதனையாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்பும் முதலமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்க தமிழக மக்கள் அனைவரும் காத்துக் கொண்டுதான் உள்ளனர்.